தினம் ஒரு கவிதை.. இனி ஒரு விதி செய்வோம்!

Feb 03, 2025,11:36 AM IST

- கவிஞாயிறு இரா.கலைச்செல்வி


ஆம் ...பெண்களே ..!!!

இனி ஒரு விதி செய்வோம்.


பொம்பளை சிரிச்சா போச்சு..!!

புகையிலை விரிச்சா போச்சு..!! 


அடுப்பூதும்  பெண்களுக்கு 

படிப்பு எதற்கு..?


இது எல்லாம் பழைய விதி ..!!

இந்த பழைய விதி சற்று மாற எத்தனித்த ...


இந்த நல்ல வேளையில்...

இன்று தேவை புதிய விதிகள்.


ஆணுக்கு நிகராய்  வேலைக்கு செல்லும் ,

பெண்ணுக்கு இரட்டிப்பு சுமைகள் இன்று.




மகளிரை வேலைக்கு செல்ல ...

மறுதலிக்காத ஆண்கள் ... இன்று 


வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வதில் , 

வீம்பு செய்கிறார்கள்.


பகலவன் உதிக்கும்  முன், துயில் எழுந்தவள் ..!!

பல வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் ,முடிந்து ...

படுக்கையறை  செல்கையில்  மணி நள்ளிரவு..!!!


தாய்மடி சுகம் அறியா குழந்தைகள்..!!

தஞ்சமின்றி பரிதவிக்கும் தளிர்கள்..!!


இன்றைய அம்மாக்களின் 

இனிய பாச வார்த்தை படி.. படி...


பச்சிளம் குழந்தைகளுக்கு கூட ,

பாலியல் கொடுமைகள் இன்று..!!! 


ஆணுக்கு முழு ஆடை ..!!

பெண்ணுக்கு அரைகுறை ஆடை ..!! என

ஆணை வகுத்த  திரைப்பட ஊடகம்...!!!


கிசுகிசுக்களை மட்டுமே ...

மிகைப்படுத்தும்  பல பத்திரிகைகள்..!!


வரும் கால அப்துல் கலாம்களின் 

நேரத்தையும் ,உயிரையும், உறிஞ்சி குடிக்கும்..!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்..!!!


இதற்கெல்லாம் என்னதான் தீர்வு..??

இனி இன்றியமையாத் தேவை ..??


புதிய  மானுட விதிகள்..!!

புத்துயிர் ஒழுங்கு விதிகள்..!!!


இனி ஒரு விதி செய்வோம் ..!!!

சிந்திப்போம் .செயல்படுவோம்.

பெண்ணே புறப்படு..!!! .அதன் வழி நடக்க..!!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!

news

Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

news

உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!

news

Sudha Thirunarayanan Cute Story: கோலம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

அதிகம் பார்க்கும் செய்திகள்