Pongal Special.. சென்னை, மதுரை, கோவையில்.. ஜனவரி 10ம் தேதி முதல் 19 வரை.. பலூன் திருவிழா!

Nov 12, 2024,11:29 AM IST

சென்னை: 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் சர்வதேச பலூன் நடைபெற உள்ளது. இந்த விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக   ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது  வழக்கம். இப்பண்டிகை ஜாதி மத இன பேதமின்றி உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.  உழவர்கள் தங்களின் உழவு தொழிலுக்கு உதவிய இயற்கையான சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து, அதனை சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர் . அதேபோல்   ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும் இந்த பண்டிகையில் இடம்பெறுகின்றன. 




அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை  ஜனவரி 14 ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் 15 ஆம் தேதியும், காணும் பொங்கல் 16 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் திங்கட்கிழமை போகி பண்டிகை 13ஆம் தேதி  வருகிறது.  ஜனவரி 13 முதல் 16 தேதி வரை நான்கு நாட்களோடு,போகி பண்டிகைக்கு முன்பு சனி, ஞாயிறு வார இறுதி நாட்களை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களை கொண்டாட மக்கள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர்.


இதற்கிடையே 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்றது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச  பலூன் திருவிழா, தமிழ்நாடு அரசு சார்பில்  சென்னை, கோவை, மதுரை என முக்கிய நகரங்களில்  கொண்டாடப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி குறித்து விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்