- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் நாம் அனைவரும் கொண்டாடவிருக்கிறோம். இல்லைங்களா? வாங்க பிரண்ட்ஸ் மகளிர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
ம - மதிப்பு ,மரியாதைக்கும் உரிய ஒரு வார்த்தை மந்திரம் 'பெண்'.
க- கண்ணும் கருத்துமாய் குடும்ப பொறுப்பை சுமப்பவள் பெண்.
ளி - களிப்பூட்டி தன் குடும்ப உறுப்பினர்களை குதூகலப் படுத்துபவளும் பெண்.
ர் - 'ஆணுக்குப் பெண் நிகர் 'இந்த அழகான வாக்கியத்திற்கு பொருத்தமானவள் பெண்.
'சக்தி இல்லையேல் சிவன் இல்லை .சிவன் இல்லையேல் சக்தி இல்லை 'என்ற கூற்று ஆண்டவனுக்கு மட்டுமல்ல மனிதர்களாக இவ்வுலகில் பிறந்த நமக்கும் தான். ஆண் இல்லாமல் பெண்ணில்லை பெண் இல்லாமல் ஆண் இல்லை அந்த ஆணை சுமப்பவளும் பெண்தான்.
சூரியன் இல்லையேல் பூமி சுழலாது பெண்கள் இல்லையேல் பூவுலகம் இயங்காது. வாழ்க்கை ஏழு வண்ண வானவில் என்றால் பெண்கள் அதன் உள்ளிருக்கும் ஏழு வண்ணங்கள் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் பெண்ணின் பங்களிப்பு என்பது சொல்லில் அடங்காது. ஒருவர் வீட்டில் குறும்பும் சுட்டித்தனம் நிறைந்த மகளாய் பிறந்து, பெற்றவர்கள் விருப்பத்திற்கும், தன் விருப்பத்திற்கும் ஏற்ப, மற்ற ஒருவருக்கு மனைவியாகிறார். அன்பின் வெளிப்பாடாய் பிள்ளைகள் பெற்று அன்பு தாயாகிறாள். குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கட்டுக்கோப்பாக பார்த்துக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவளே.
இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, வேலைக்குச் சென்று ஆணின் பாரத்தை ,குடும்ப பொறுப்பை குறைக்க, அவனுக்கு நிகராக வேலை செய்து சம்பாதிப்பதிலும் அவளுக்கு நிகர் அவளே. வலிமையான ,அன்பான, அழகான ,அறிவான பெண்களாக பிறந்த அனைவரும் பெருமைப்பட வேண்டும்.
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...!!! அனைவருக்கும் அட்வான்ஸ் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: எம்எல்ஏ அருள்!
முதல்வரே பரந்தூருக்கு செல்லுங்கள்.. இல்லாவிட்டால் மக்களுடன் தலைமைச் செயலகத்திற்கு வருவேன்.. விஜய்
திமுக, பாஜகவிற்கு எதிரானதாகதான் தவெக கூட்டணி இருக்கும்: தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!
2026 சட்டசபைத் தேர்தல்: விஜய்தான் முதல்வர் வேட்பாளர் .. பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. தவெக அதிரடி!
இனி வரும் நாட்களில் அதிமுக நடத்தும் போராட்டங்களில் பாஜக இணைந்து செயல்படும்: நயினார் நாகேந்திரன்!
தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது... எவ்வளவு குறைவு தெரியுமா?...
நீண்ட தாமதத்திற்குப் பிறகு.. இந்தியாவுக்கு வரவுள்ள 6 அமெரிக்க அப்பாச்சே தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
வெள்ளை உளுத்தம் கஞ்சி (urad dal porridge).. பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு
தவெக செயற்குழு கூடுகிறது.. விஜய் சுற்றுப்பயணம் எப்போது.. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன?
{{comments.comment}}