சென்னை: சமுதாயத்தில் வாழும் "உயர்ந்த இன" மக்கள் மட்டும் தான் சாதிக்க வேண்டுமா என்ன.. எந்த வேறுபாடும் இன்றி பழங்குடியின மக்களும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைக்க முடியும் என்பதை, சமூகத்தின் ஒரு "தட்டு" உருவாக்கி வைத்திருந்த "பல தட்டு பாரம்பரியத்தை" அடித்து உடைத்து தகர்த்து எங்களாலும் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி.
மலை மற்றும் காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் ஒரு காலத்தில் கல்வி அறிவின்றி வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கான தனி வாழ்க்கை முறையுடன், உணவு, உடை, இருப்பிடம், மற்றும் பழக்கவழக்கம் போன்றவற்றில் வேறுபட்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறிவிட்டது. இவர்களும் படிக்க முடியும், இவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை சமீப காலமாக பலரும் நிரூபிக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக பெண்கள்.. !
பழங்குடியின மக்களும் எல்லா துறைகளிலும் உயர்ந்து விளங்க வேண்டும், சமூக அந்தஸ்தை அடைய வேண்டும், பாரபட்சத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக பழங்குடியின மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக பழங்குடியின மக்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அவர்களின் திறமையை நிரூபித்தும் வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் தன்னை நிரூபித்த பழங்குடியின பெண்தான் ஸ்ரீபதி. அவர்தான் தமிழ்நாட்டில், பழங்குடியின இனத்திலிருந்து உருவான முதல் பெண் நீதிபதி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
யார் இந்த ஸ்ரீபதி..?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. காளி மற்றும் மல்லிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீபதி. இவருக்கு சரண்யா என்ற தங்கையும், ஜெயசூர்யா என்ற தம்பியும் உள்ளனர். இவர் இதே பகுதியில் உள்ள வெங்கட்ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
காளி, மல்லிகா தம்பதியினரின் நிலங்களை அரசு கையகப்படுத்தியதன் காரணமாக இவர்கள் சொந்த ஊரான ஏலகிரிக்கு சென்று ஹோட்டலில் பணிபுரிந்து உள்ளனர். இதன் பின்னர் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்து அந்த பணத்தை வைத்து ஸ்ரீபதியை படிக்க வைத்துள்ளனர்.
ஏலகிரியில் உள்ள சார்லஸ் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீபதி பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 5 வருடம் சட்டப் படிப்பை படித்து முடித்தார். படிக்கும்போதே திருமணம் செய்து கொண்ட ஸ்ரீபதி பிரசவித்த மறுநாளே தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்றார். ஒரு பெண்ணுக்கு குழந்தை பிரசவித்தால் அதன் வலி என்னவென்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. மனதளவிலும் உடலளவிலும் அதை உணர்ந்தால் மட்டுமே தெரியும். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தனது 23 வயதில் நீதிபதி தேர்வில் வென்றுள்ளார் ஸ்ரீபதி.
எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத சூழ்நிலையில் கஷ்டப்பட்டு படித்து சாதித்துள்ளார். ஹோட்டலில் வேலை செய்து படிக்க வைத்த தனது தாய் தந்தையருக்கு ஸ்ரீபதி மிக பெரிய கௌரவத்தை கொடுத்துள்ளார்.
இதைவிட ஒரு தாய் தந்தையருக்கு என்ன கௌரவம் கிடைத்துவிட முடியும்.
திருமணமானால் என்னால் படிக்க முடியுமா.. குழந்தை பெற்றால் என்னால் படிக்க முடியுமா.. என்ற நிலைமையை முறியடித்து படிக்கும்போதே திருமணம் செய்து, பிரசவித்த உடனே நீதிபதி தேர்வு எழுதி வென்ற ஸ்ரீபதி எல்லா பெண்களுக்கும் ஒரு ரோல் மாடலாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். ஒவ்வொரு பெண்ணும் இதுபோல உறுதி பூண வேண்டும்.. கடின உழைப்புக்கு ஈடு இணையே கிடையாது.. பெண்களுக்கு சக்தி வாய்ந்த ஆயுதம், பாதுகாப்பு படிப்பு மட்டுமே.. அதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக சாதிக்க வேண்டும்.. சாதித்துக் காட்டிய ஸ்ரீபதி போல ஜொலிக்க வேண்டும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}