சிஎஸ்கேன்னா சும்மாவா?.. அடுத்தடுத்து அதிரிபுதிரி வெற்றி.. முதலிடத்தில் சென்னை!

Apr 24, 2023,03:13 PM IST
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் அணி புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடத்தை எட்டி பிடித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டுவென்டி- 20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. 



236 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணியின் இந்த வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் விசில் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு முன் ஏப்ரல் 21 ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. அடுத்தடுத்த வெற்றிகளால் ஐபிஎல் 2023 அணிகளின் புள்ளி விபர பட்டியலில் சென்னை அணியின் புள்ளிகள் அதிரடியாக உயர்ந்து, முதலிடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை 33 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. 

இதில் 7 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து, 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்