சென்னை: ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெறவுள்ளது.
ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு குஷியாகி விடும்... ஒரே குஜாலாகி விடும்.. போட்டிகள் எப்போது தொடங்கும், எங்கு நடக்கும், யார் யாரெல்லாம் மோத உள்ளனர் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பஞ்சமே இருக்காது. அப்படித்தான் தற்பொழுது ஐபிஎல் 2024 தொடர் எப்போது? எங்கு? என்ற கேள்விகள் எழுந்து ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு குட் நியூஸ் வந்துள்ளது. அது என்னவெற்றால், தல தோனியின் தரிசனம் தான். ஆம் தல தோனியின் தரிசனம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. அதுவும் சிஎஸ்கே வின் கோட்டை ஆன சென்னை சேப்பாக்கத்தில் களம் இறங்குகிறது.
2024 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. 21 போட்டிகள் குறித்த பட்டியலை மட்டும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையும், பெங்களூரு அணிகளும் மோதவுள்ளன.
சென்னையின் 4 போட்டிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 4 போட்டிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 22ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி நடைபெறும். 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னையில் சிஎஸ்கே மோதும். மார்ச் 31ம் தேதி டெல்லி கேபிடல்ஸுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் சென்னை அணி மோதும்.
21 போட்டிகள் குறித்த விவரம்:
மார்ச் 22 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)
மார்ச் 23 - பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் (மொஹாலி)
மார்ச் 23 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ( கொல்கத்தா)
மார்ச் 24 - ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட் (ஜெய்ப்பூர்)
மார்ச் 24 - குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (அகமதாபாத்)
மார்ச் 25- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் (பெங்களூரு)
மார்ச் 26- சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் (சென்னை)
மார்ச் 27 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (ஹைதராபாத்)
மார்ச் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் (ஜெய்ப்பூர்)
மார்ச் 29 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூரு)
மார்ச் 30 - லக்னோ சூப்பர் ஜெயன்ட் - பஞ்சாப் கிங்ஸ் (லக்னோ)
மார்ச் 31 - குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (அகமதாபாத்)
மார்ச் 31 - டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (விசாகப்பட்டனம்)
ஏப்ரல் 1- மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)
ஏப்ரல் 2 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட் (பெங்களூரு)
ஏப்ரல் 3 - டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (விசாகப்பட்டனம்)
ஏப்ரல் 4 - குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (அகமதாபாத்)
ஏப்ரல் 5 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஹைதராபாத்)
ஏப்ரல் 6 - ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( ஜெய்ப்பூர்)
ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் (மும்பை)
ஏப்ரல் 7 - லக்னோ சூப்பர் ஜெயன்ட் - குஜராத் டைட்டன்ஸ் (லக்னோ)
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}