மும்பை: கடந்த 10 வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அசைக்க முடியாத இடத்தில் இருந்து வந்த ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளது அணி நிர்வாகம். புதிய கேப்டனாக ஹர்டிக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
2024 தொடரில் ஹர்டிக் பாண்ட்யாதான் கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 10 வருடமாக மும்பை இந்தியன்ஸ் அணியை மிக மிக வலுவான ஒன்றாக மாற்றி வைத்திருந்தார் ரோஹித் சர்மா. 10 தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்று, அதிக அளவிலான கோப்பைகளை வென்ற ஐபிஎல் அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்வதற்கும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியே காரணம்.

சமீபத்தில்தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்டிக் பாண்ட்யா, கடைசி நேரத்தில் அங்கிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார். வந்த வேகத்தில் அவருக்கு கேப்டன் பதவியைக் கொடுத்துள்ளனர்.
2 முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமை தாங்கியவரான ஹர்டிக், அறிமுகமான 2022ம் ஆண்டு தொடரிலேயே கோப்பையைத் தட்டிக் கொண்டு வந்தது நினைவிருக்கலாம்.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே கேப்டன் மாற்றப்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்தைச் சேர்ந்த மஹளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். சச்சின் முதல் ஹர்பஜன் மற்றும் ரிக்கி பான்டிங் .. ரோஹித் சர்மா வரை பலரும் அருமையான தலைமையைக் கொடுத்துள்ளனர்.
இனி அடுத்த தலைமுறை கிரிக்கெட்டுக்கு நாம் மாற வேண்டிய தருணம் இது. இதைக் கருத்தில் கொண்டே 2024 கேப்டன் பொறுப்பை ஹர்டிக்கிடம் வழங்கியுள்ளோம் என்றார்.
ஹர்டிக் பாண்ட்யாவின் வரலாறு

ஹர்டிக் பாண்ட்யா 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில்தான் இருந்தார். அப்போது 92 போட்டிகளில் விளையாடி 1476 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 27.33 ஆகும். ஸ்டிரைக் ரேட் 153 ஆகும். இதில் 4 முறை அரை சதம் போட்டுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 91 ஆகும். பவுலிங்கைப் பொறுத்தவரை அவர் 42 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். பெஸ்ட் பவுலிங் என்றால் அது 3 விக்கெட்களை வீழ்த்தி 20 ரன்களை விட்டுக் கொடுத்ததே.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 31 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்டிக் பாண்ட்யா 833 ரன்களை எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 37.86 ஆகும். ஸ்டிரைக் ரேட் 133. 6 அரை சதம் எடுத்துள்ள ஹர்டிக், 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே பெஸ்ட் ஸ்கோராகும். 11 விக்கெட்களையும் இந்த 2 சீசன்களில் அவர் வீழ்த்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளிலும் இடம் பெற்று மொத்தம் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற சாதனையும் ஹர்டிக் பாண்ட்யாவுக்கு உண்டு. இதில் ஒரு முறை கேப்டனாக, மற்ற 4 முறை வீரராக அவர் வென்றுள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}