டெல்லி: 2008ம் ஆண்டு யு 19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது அந்த அணியில் முக்கிய வீரராக விளங்கியவர் விராட் கோலி. அப்போது அதே அணியில் இடம் பெற்றிருந்த இன்னொரு இளம் வீரர்தான் தன்மய் ஸ்ரீவாஸ்தவா. மேட்டர் என்னன்னா.. இப்போது தன்மய் ஸ்ரீவாஸ்தவா ஐபிஎல் போட்டியில் நடுவராக அறிமுகமாகிறார்.
மலேசியாவில் 2008ம் ஆண்டு நடந்த யு19 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற அந்தத் தொடர் மூலமாகத்தான் விராட் கோலி பிரபலமானார். ஒரு நட்சத்திரமாக அதில் அவர் ஜொலித்திருந்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று இந்திய அணியில் முக்கிய ஸ்டாராக இருக்கிறார் கோலி. இடையில் கேப்டனாகவும் கலக்கியிருந்தார்.
அந்தத் தொடர் கோலிக்கு உயர்வு கொடுத்தாலும் கூட அவருடன் டீமில் இடம் பெற்ற தன்மய் ஸ்ரீவாஸ்தவாவுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் 46 ரன்களைக் குவித்திருந்தார் ஸ்ரீவாஸ்தவா. அதன் பிறகு அவர் பல போட்டிகளில் ஆடினாலும் கூட இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் நடுவராக அறிமுகமாகிறார் ஸ்ரீவாஸ்தவா.
ஸ்ரீவாஸ்தவா குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள எக்ஸ் தள செய்தியில், சிறந்த வீரராக களத்தில் இருந்து வந்த ஸ்ரீவாஸ்தவா தற்போது நடுவராக புதிய அவதாரம் காண்கிறார். அவருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது.
இடது கை பேட்ஸ்மேன் ஆன ஸ்ரீவாஸ்தவா யு 19 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 262 ரன்களை எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 52.40 ஆக இருந்தது. மொத்தம் 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4918 ரன்களை எடுத்துள்ளார் ஸ்ரீவாஸ்தவா.
வீரர்கள் நடுவர்களாக மாறுவது இந்திய கிரிக்கெட்டுக்குப் புதிதல்ல. முன்பு சுழற்பந்துவீச்சாளர் எஸ்.வெங்கட்ராகவன் அம்பயராக பணியாற்றி அசத்தியிருந்தார். பின்னர் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் நடுவராக அசத்தலாக பணியாற்றியிருந்தார். இந்த வரிசையில் ஸ்ரீவாஸ்தவா அசத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
{{comments.comment}}