துபாய்: 2024 ஐபிஎல் வீரர்கள் ஏலம் வேற லெவலில் இருக்கிறது. யாரும் எதிர்பாராத பெரிய பெரிய விலைக்கு இன்று பல வீரர்கள் ஏலம் போயுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகைக்கு நடந்த ஏலமாக இது பார்க்கப்படுகிறது.
இன்றைய ஏலத்தின் மிகப் பெரிய ஹைலைட்டே ஆஸ்திரேலியாதான். இந்த நாட்டின் வீரர்கள்தான் மிகப் பெரிய தொகைக்கு இன்று ஏலம் போயுள்ளனர். அதாவது டாப் 2 அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் ஆஸ்திரேலியர்கள்தான்.
மிட்சல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். பாட் கமின்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். நியூசிலாந்தைச் சேர்ந்த டெரில் மிட்சல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை இன்று அதிக விலைக்கு ஏலம் போனவர் ஹர்ஷல் படேல்தான். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதேபோல பந்து வீச்சாளர் அல்ஸரி ஜோசப் ரூ. 11.50 கோடிக்கு ஏலம் போனார். ராஜஸ்தான் அணியில் ரோமன் பாவல் ரூ. 7.40 கோடிக்கு ஏலம் போனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இன்றைய ஏலத்தில் 2 வீரர்கள் 20 கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளனர். இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இப்படி நடந்ததில்லை. அந்த வகையில் இந்த வருட ஏலம் வரலாறு படைத்து விட்டது. மேலும் அதிக விலை கொடுத்து வீரர்களை ஏலம் எடுப்பதில் சன்ரைசர்ஸ் அணியும், கொல்கத்தாவும் தீவிரம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}