சல்லிசு விலைக்கு ரவீந்திரா.. செம ரேட்டுக்கு மிட்சல்.. சென்னை சூப்பர் கிங்ஸ் Almost செட் ஆயிருச்சு..!

Dec 19, 2023,03:07 PM IST
துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இன்னும் நான்கு வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். ஒருவர் வெளிநாட்டு வீரர், மற்ற 3 பேரும் இந்திய வீரர்கள். கை நிறைய பணம் வைத்திருந்தும் கூட பார்த்துப் பார்த்து வீரர்களை தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

தல தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இரட்டைத் தலையாக இருக்குமே என்று டிராவிஸ் ஹெட்டுக்கு குறி வைத்துப் பார்த்து அது முடியாமல் போய் விட்டது..  அட, தலைதான  போச்சு விடு விடு என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு ரச்சின் ரவீந்திராவை சல்லிசான விலைக்கு  அள்ளிப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய விலைக்கு டெரில் மிட்சலை தூக்கிப் போட்டுக் கொண்டது.

ரச்சின் ரவீந்திரா 1.8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். மிட்சலுக்கு ரூ. 14 கோடியை செலவிட்டுள்ளது சென்னை. இவர்கள் தவிர ஷர்துள் தாக்கூர் ரூ. 4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இன்னும் நான்கு வீரர்களை சென்னை அணியால் வாங்க முடியும். கையில் ரூ. 11.60 கோடி மிச்சம் உள்ளது.



இதுவரை நடந்துள்ள ஏலத்திற்குப் பிறகு சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

எம்எஸ் தோனி, மொயீன் அலி, தீபக் சஹர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருத்துராஜ் கெய்க்வாட், ராஜ்வர்த்தன் ஹங்கர்கர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் செளத்ரி, மதீஷா பதிரதனா, அஜிங்கியா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்சல் சான்ட்னர்,  சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா, டெரில் மிட்சல், ரச்சின் ரவீந்திரா, ஷர்துள் தாக்கூர்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்