துபாய்: நியூசிலாந்து ஆல் ரவுண்டர் டெரில் மிட்சலை கடும் போட்டிக்கு மத்தியில் ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இவரை எப்படியும் எடுத்தாக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்ததால், விலை அதிகரித்தபோதும் கூட கவலைப்படாமல் பெரிய விலை கொடுத்து மிட்சலை வாங்கியுள்ளது.
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் டெலிர் மிட்சல். சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான டெரில் மிட்சல், 2011 முதல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருபவர் டெரில் மிட்சல். நடுக்கள ஆட்டக்காரரான மிட்சல் இன்னிங்ஸை நிலை நிறுத்தி ஆடுவதில் கில்லாடி. ஸ்லோ பந்துகளை போட்டு விக்கெட்களை வீழ்த்துவதில் சூப்பராக செயல்படக் கூடியவர்.
2019ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் முதலில் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் முக்கியப் பங்காற்றி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற உதவினார்.
டெரில் மிட்சலை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப் பெரிய விலை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அதாவது ரூ. 14 கோடிக்கு அவர் விலை போனார். அவரை எப்படியும் விலைக்கு வாங்கி விட வேண்டும் என்ற வேகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது. இதனால் விலை பெரிதாக இருந்தாலும் கூட அவரை எடுத்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}