துபாய்: துபாயில் ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் கோலாகலமாக தொடங்கியது. முதல் வீரராக ரோமன் பாவல் விலைக்குப் போனார். 1 கோடிக்கு அடிப்படை விலை வைக்கப்பட்ட அவர் ரூ. 7.40 கோடிக்கு விலை போனார். முதல் வீரரே பரபரப்பான முறையில் ஏலம் போனதால் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது வீரர்கள் ஏலம்
2024 ஐபிஎல் வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் தொடங்கியது. 333 வீரர்கள் இந்த ஏலத்தில் விடப்படுகின்றனர். ஐபிஎல் அணிகள் பத்தும் முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆவலுடன் களம் குதித்துள்ளன. முதல் முறையாக இந்த ஏலத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஏலத்தில் முதல் வீரராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ரோமன் பாவல் விடப்பட்டார். அடிப்படை விலையாக இவருக்கு ரூ. 1 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலம் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
அடுத்தடுத்து விலை ஏறிக் கொண்டே போக கடைசியில் ரூ. 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஏலம் போனார் ரோமன் பாவல்.
அதிரடியான ஆல்ரவுண்டர் பாவல். ஜமைக்காவைச் சேர்ந்த இவர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். அதிரடியான பேட்ஸ்மேனான பாவல், 2015ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார். முதல் போட்டியிலேயே மேன் ஆதி மேட்ச் வாங்கியவர் இவர். பேட்ஸ்மேனாக மட்டுமலம்லாமல் மீடியம் பேஸராகவும் பந்து வீச்சிலும் கலக்கக் கூடியவர் பாவல்.
தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டி20 அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பாவல்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}