துபாய்: ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமான டிராவிஸ் ஹெட்டை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 7.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்று அசத்தியது. அந்த அணியின் முக்கிய வீரரான டிராவிஸ் ஹெட் அபாரமான சதம் அடித்து இறுதிப் போட்டியில் தனது அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இன்றைய வீரர்கள் ஏலத்தில் டிராவிஸ் ஹெட்டுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ரூ. 2 கோடி அடிப்படை விலையுடன் டிராவிஸ் ஹெட் ஏலம் விடப்பட்டார். அவரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முட்டி மோதின.
இரு அணிகளும் டிராவிஸை எடுக்க மும்முரமாக இருந்ததால் விலை ஏறிக் கொண்டே போனது. கடைசியில் டிராவிஸ் ஹெட்டை, ரூ. 7.80 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தட்டிக் கொண்டு போய் விட்டது. சென்னை இவரை ஏலத்தில் எடுத்து விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சன் ரைசர்ஸ் அள்ளிக் கொண்டு போய் விட்டது.
ஆஸ்திரேலிய அணியின் நடுக்கள வீரராக முக்கியமான வீரராக வலம் வருபவர் டிராவிஸ் ஹெட். மைக் ஹஸ்ஸிக்குப் பிறகு அந்த இடத்தில் சரியான வீரர் இல்லாமல் தடுமாறியது ஆஸ்திரேலியா. அதை சரி செய்ய தோதாக வந்து சேர்ந்தவர்தான் டிராவிஸ் ஹெட். 2015ம் ஆண்டுதான் அவர் அணியில் முக்கிய இடம் பிடித்தாதர். ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த அபார சதம்தான் அவரை உலகப் புகழுக்கு உயர்த்தியது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}