ஐபிஎல் டி 20 கிரிக்கெட் 2024 திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்

Mar 22, 2024,02:18 PM IST

சென்னை: சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. 


இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 17வது ஐபிஎல் திருவிழா இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளுக்கு அன்று முதல் இன்று வரை ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.




இப்போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இந்த போட்டியில்,  நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த முறை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது  பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும் விதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


சேப்பாக்கம் மைதானத்தில் இன்று  தொடங்கும் விழா மாலை 6:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம். இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர்  இசை வெள்ளத்தில் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா காரணமாக இன்று மட்டும் இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கும், ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால், ஒரு ஆட்டம் மாலை 3.30க்கும், மற்றொரு ஆட்டம் இரவு 7.30க்கும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட விதிமுறைகள் நடப்பு ஆண்டிலும் தொடர்கிறது.


இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ்சும் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவதால் சென்னையில் 2500 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்