கோல்கத்தா : 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12வது போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 28ம் தேதி துவங்கி வருகின்றன. இன்று நடைபெறும் 12வது போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 2 போட்டிகளில் விளையாடிய கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் அந்த அணிக்கு இதுவரை புள்ளிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம் பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

10 அணிகளைக் கொண்ட 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் கோல்கத்தா அணி பூஜியம் புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 4 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது இடத்தில் டில்லி கேபிடல்ஸ் அணியும் உள்ளன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில், 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
முதல் வெற்றியை பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் கோல்கத்தா அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 2 புள்ளிகளை பெற்று தர வரிசை பட்டியலில் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 11 போட்டிகளில் கோவா டைட்டன்ஸ், கோல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே இதுவரை புள்ளிகள் எதுவும் எடுக்காமல் உள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}