முதியோர் உடல் நலம்!

Oct 01, 2026,11:01 AM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி 


விடியலின் வெளிச்சத்தில் மிதமான நடைபயிற்சி,

விரைவாக தளர்வடையும் தசைகளுக்கு புத்துணர்ச்சி!


சீரான நேரத்தில் சத்தான உணவளித்து,

செரிமானம் சிறக்கவே நல்வழி காண்போம்.


காலையும் மாலையும் கனிவான உரையாடல்,

கவலையற்ற உள்ளத்திற்கு அமைதிதரும் தியானம்!


நிறைய தூய குடிநீரும் மிதமான வெந்நீரும்,

நித்தமும் அவர்தம் உடல்பலத்தைக் காத்திடுமே!


மிதமான உடற்பயிற்சி ,நேர்மறை எண்ணங்கள் ,

மீதமுள்ள வாழ்நாளை கூட்டிடுமே! 


அரை வயிறு  ஆரோக்கிய உணவு உண்டு,

 ஆனந்தமாய் உடல் நலம்  பேணி வாழ்வோம்!




வழுக்கும் தரை நீக்கி விபத்துகள் தடுத்திடுவோம்,

வழியெங்கும் பாதுகாப்பாய் இருந்திடுவோம்!


தூக்கத்திற்கு ஏற்ற அமைதி சூழலில்- விரைந்து,

 தூங்கி  உடல் உறுப்புகளை காப்போம்.


அன்றாடத் வேலைகளை அன்போடு செய்திடுவோம்,

அனுதினமும் முதியோரின் உடல்நலனை  காத்திடுவோம்!


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்