இஸ்ரேலின் போர்க்குற்றங்களை நிறுத்த வேண்டும்.. ஈரான், சவூதி அரேபியா ஆலோசனை

Oct 12, 2023,02:42 PM IST

ரியாத்: பாலஸ்தீனத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போர்க்குற்றத்தை நிறுத்த வேண்டும் என்று  ஈரான் மற்றும் சவூதி அரேபிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இந்த இரு நாடுகளையும் சமீபத்தில்தான் சீனா மத்தியஸ்தம் செய்து சமரசம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.




ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் பாலஸ்தீனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.  அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.


சவூதி இளவரசர் சல்மான் கூறுகையில், தற்போது பாலஸ்தீனத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதலை நிறுத்த அனைத்து சர்வதேசத் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். இதை நிறுத்தியாக வேண்டும். அப்பாவி மக்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை சவூதி அரேபியா ஒருபோதும் ஏற்காது என்றார்.


ஈரான் அரசு ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய தாக்குதல் மிகப் பெரிதாக இருப்பதாலும் அமெரிக்காவும் களத்தில் குதித்திருப்பதாலும், ஹமாஸுக்கு ஆதரவாக எப்படி செயல்படுவது என்பதில் முஸ்லீம் நாடுகளுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், இஸ்ரேலை இப்படியே விட்டால், மொத்த பாலஸ்தீனத்தையும் மீண்டும் ஆக்கிரமித்து விடும் என்ற அச்சமும் முஸ்லீம் நாடுகளிடம் உள்ளது. அதையும் முறியடிக்க அவை உறுதியாக உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்