தெஹ்ரான்: ஈரான் நாட்டு அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் முற்போக்காளரும், மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமானவராக கருதப்படுபவருமான மசூத் பெசெஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.
தீவிரக் கருத்துடைய வலதுசாரி பிரிவைச் சேர்ந்த சயீது ஜலீலியை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் மசூத் பெசெஸ்கியன்.
ஈரான் அதிபராக இருந்து வந்தவர் இப்ராஹிம் ரைசி. இவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் கடும் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக திகழ்ந்தவர். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஈரானையும் மறைமுகமாக பங்கெடுக்க வைத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் ரைசி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து அந்நாட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 40 சதவிகித வாக்குகள் பதிவானது. இதில் சீர்திருத்த கட்சி சார்பாக போட்டியிட்ட மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகளையும், வலதுசாரி தலைவர் சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளையும், பெற்றிருந்தனர்.
ஈரான் நாட்டின் சட்டப்படி, தேர்தலில் 50 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த கட்சி தலைவர்கள் 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த நிலையில், தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இருவருக்கும் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது.
இந்த இரண்டாம் கட்ட தேர்தல் முடிவில் மசூத் பெசெஸ்கியன் 56 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவியேற்க இருக்கிறார். 69 வயதான இவர் ஈரான் நாட்டின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். மேற்கத்திய நாடுகளுடனான உறவை சீர்படுத்த தான் முயற்சிக்கப் போவதாக மசூத் கூறியுள்ளார்.
மசூத் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யப் போவதாக கூறியுள்ள போதிலும் கூட அது அத்தனை சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், ஈரான் அரசில் இன்னும் தீவிரக் கருத்தாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களைத் தாண்டி எந்த அளவுக்கு மசூத்தால் செயல்பட முடியும் என்று தெரியவில்லை.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}