டெஹரான்: வாட்ஸ் ஆப், கூகுள் பிளேஸ்டோர் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஈரான் அரசு நீக்கியுள்ளது. இதனால் இன்டர்நெட் தொடர்பான பிற தடைகளும் நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தத் தடை நீக்கம் தொடர்பாக உயர் மட்ட அரசு அதிகாரிகளுடன், அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து வாட்ஸ் ஆப், கூகுள் பிளேஸ்டோர் தடை நீக்க அறிவிப்பு வெளியானது. ஈரானில் ஏற்கனவே இன்டர்நெட் சேவைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து ஈரான் நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சத்தார் ஹஷேமி கூறுகையில், இன்டர்நெட் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான முதல் கட்ட நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக அதிபர், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள் என அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மாற்றங்கள் தொடரும் என்றார் அவர்.
தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இன்டர்நெட் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள மசூத் பெசஸ்கியான் உறுதி அளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அதை அவர் நிறைவேற்றத் தொடங்கியுள்ளார்.
அதேசமயம் வெளிநாட்டு நிறுவனங்களான வாட்ஸ் ஆப், கூகுள் பிளேஸ்டோருக்குப் பதில் அதற்கு சமமான உள்ளூர் தொழில்நுட்பங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}