அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

May 20, 2024,05:26 PM IST

டெஹரான்:  ஈரானில் அதிபர் இப்ராகிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டரான மிகவும் அறுதப் பழசானது. அதாவது வியட்நாம் போர் காலத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  பெல் 212 ரக ஹெலிகாப்டராகும். அதிபர் ரைசி பயன்படுத்தியது மேம்படுத்தப்பட்ட வடிவமா அல்லது பழசா என்று தெரியவில்லை.


வியட்நாம் போர் காலத்தில் அமெரிக்கா ஒரு ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியது. அதற்கு பெயர் யுஎச் 1என் டிவின் ஹே என்பதாகும். இதை பின்னர் சாதாரண முறையிலும் பயன்படுத்துவதற்கேற்ப மாற்றியமைத்தது. அதுதான் பெல் 212 ஆகும். இதைத்தான் ஈரான் இதுகாலம் வரை பயன்படுத்தி வந்தது. அத்தகைய ஹெலிகாப்டரில்தான் அதிபர் இப்ராகிம் உள்ளிட்டோர் பயணித்து தற்போது விபத்தில் சிக்கினர்.


பெல் ரக ஹெலிகாப்டர்களை 1960களில் கனடா ராணுவத்துக்காக அமெரிக்கா தயாரித்துக் கொடுத்து வந்தது. பின்னர் இது பலமுறை மேம்படுத்தப்பட்டது. தற்போதைய புதிய வடிவில் இந்த ஹெலிகாப்டரில் இரட்டை என்ஜின்கள் உள்ளன. 1971 முதல் இந்த ஹெலிகாப்டர் பரவலான புழக்கத்திற்கு வந்தது.




எல்லா வகையான காலநிலையிலும் பயணிக்கக் கூடியதுதான் இந்த பெல் ஹெலிகாப்டர். இதில் ஆட்கள் பயணிக்கலாம், ஆயுதங்களை எடுத்துச் செல்லலாம், சரக்குகளை கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிவில் பயன்பாட்டுக்கும், ராணுவப் பயன்பாட்டுக்கும் ஏற்றார் போல இது வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பாகும்.


ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டரானது, அரசு முறைப் பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது பெல் ஹெலிகாப்டரின் லேட்டஸ்ட் வெர்சனுக்குப் பெயர் சுப்ரா பெல் 412 ஆகும். இது காவல்துறையினர், மருத்துவ அவசரம், படையினரை கூட்டிச் செல்வது, அவசர கால பயன்பாடு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் பைலட் உள்பட 15 பேர் வரை பயணிக்க முடியும்.


ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதரத் தடை விதித்துள்ளன. குறிப்பாக பல முக்கிய விவாகரங்களில் ஈரான் மீது கடுமையான தடைகள் உள்ளன. இதனால் ஈரான் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதன் விமானப் போக்குவரத்துத் துறை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. புதிய விமானங்களை வாங்குவது உள்ளிட்டவை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே அதிபர் ரைசி பயன்படுத்தியது மேம்படுத்தப்படாத பழைய ரக ஹெலிகாப்டராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்