இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு

Jun 16, 2025,06:22 PM IST

டெஹ்ரான்: இஸ்ரேல் எங்கள் மீது முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியது. அதற்கு முழுமையான பதிலடி கொடுப்போம். அதுவரைக்கும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.


இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இரு நாட்டு மோதலிலும் சிக்கி அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந் சண்டையில் அப்பாவிக் குழந்தைகளும் பலியாகி வருவது உலக நாடுகளை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. உலகத் தலைவர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.


இந்தப் போர் மேலும் தீவிரமடைந்து தாக்குதலும் உச்சமடைந்தால் மிகப் பெரிய பாதிப்பை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.




இஸ்ரேல் நடத்தி வரும் கொலை வெறித் தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் ஈரானில் பலியாகியுள்ளனர். அதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்கள்தான். அதேபோல ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 


இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் மறுபக்கம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து உதவி வருகிறது அமெரிக்கா. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நிராகரித்துள்ளது. 


இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும், போரை நிறுத்துமாறும் ஈரானிடம் நட்பு நாடுகளான கத்தார், ஓமன் ஆகியவை கோரிக்கை விடுத்தன. தாங்கள் இதில் உதவத் தயாராக இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. ஆனால் போரை ஆரம்பித்தது இஸ்ரேல்தான். எனவே பதிலடி கொடுத்து வருகிறோம். அது முடியும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று ஈரான் கூறி விட்டது.


இதற்கிடையே, ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மற்றும் இராணுவ வசதிகளை தனது வான்வழித் தாக்குதல்கள் தாக்கியுள்ளதாகவும், பல உயர்மட்ட தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை கொல்லவும் இஸ்ரேல்திட்டமிட்டுள்ளது, ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு எதிராக இருப்பதாகவும், அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் இதை காதில் வாங்குமா என்பது சந்தேகம்தான்.


இதற்கிடையே, ஈரான் உளவுத்துறை தலைவர் முகமது காசெமி, இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காசெமியும் அவரது மனைவியும் ஞாயிற்றுக்கிழமை டெஹ்ரானில் நடந்த இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்