மும்பை: ஐபிஎல் சீசனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ளது. இதற்கான தங்களது விருப்ப அணிகளை ஒவ்வொரு முன்னாள் வீரர்களும் அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இர்பான் பதான் தனது அணியை அறிவித்துள்ளார். அதில் முக்கியமான இளம் வீரர்களுக்கு அவர் இடமளிக்கவில்லை.
விரைவில் இந்தியாவுக்கான டி20 உலகக் கோப்பை போட்டித் தொடருக்கான அணித் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த அணியில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதை விட முக்கியமாக டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இருப்பாரா என்ற பேச்சும் பலமாக உள்ளது. அதேபோல ஹர்டிக் பாண்ட்யா இந்தத் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அவரது விளையாட்டு மிகவும் மோசமாக உள்ளது. எந்தவிதமான தாக்கத்தையும் அவர் இதுவரை ஏற்படுத்தவில்லை. பல மோசமான தோல்விகளையும் அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது விருப்பத்துக்குரிய 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார். அதில் சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோருக்கு அவர் இடம் தரவில்லை. இர்பான் பதான் விருப்ப அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்டிக் பாண்ட்யா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திரா சஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகம்மது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
இர்பான் பதானை விடுங்க.. உங்களோட விருப்ப அணி என்ன.. சொல்லுங்க பார்ப்போம்.
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
{{comments.comment}}