பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

Jun 20, 2025,04:59 PM IST

டெல் அவிவ்:  எங்களது நாடு வலிமையான Iron Dome பாதுகாப்பு கவசத்திற்குள் இருக்கிறது. யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று மார் தட்டி வந்தது இஸ்ரேல். அதற்கேற்ப கடந்த காலங்களில் நடந்த பல தாக்குதல்களையும் அது சமாளித்துள்ளது. சேதம் பெரிய அளவில் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது. ஆனால் இத்தனை காலம் கட்டிக் காத்து வந்த அந்த பெயரை ஈரான் தற்போது தவிடு பொடியாக்கி வருகிறது. இதனால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


உண்மையில் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். காரணம், சரமாரியான தாக்குதலாலும், ராணுவ அதிகாரிகளை குறி வைத்து அழிப்பதன் மூலமும் ஈரானை நிலை குலையச் செய்து விடலாம் என்றுதான் இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக தற்போது நடந்து வருகிறது.


இஸ்ரேலின் தாக்குதலால் ஆரம்பத்தில் ஈரான் நிலை குலைந்தது என்பது உண்மைதான். ஆனால் படு வேகமாக அது சுதாரித்துக் கொண்டது. தற்போது அது நடத்தி வரும் அதிரடி பதிலடி தாக்குதல்கள் இஸ்ரேலை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன. தலைநகர் டெல் அவிவ் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. தெற்கு நகரங்கள் பலவும் கூட கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.




ஈரான் தொடர்ந்து சரமாரியான தாக்குதலை தொடுத்து வருகிறது. அதை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக இஸ்ரேலின் Iron Dome பாதுகாப்பு அரண் தோல்வியைடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


கடந்த எட்டு நாட்களாக, இஸ்ரேலின் பெரிதும் பாராட்டப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பான ஐயன் டோம் (Iron Dome), ஈரானிய ஏவுகணைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சோதிக்கப்பட்டு வருகிறது. மோதல் எட்டாவது நாளாக நீடிக்கும் நிலையில், அதன் செயல்திறன் மற்றும் நீண்டகால மோதலைத் தாங்கும் திறன் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


அல் ஜசீரா இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வியாழன் அன்று, ஈரான் ஹைஃபா மற்றும் டெல் அவிவ் நகரங்களில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களின் புதிய தாக்குதல் பாணியை உறுதிப்படுத்தியுளஅளது. இது இஸ்ரேலின் வான் பாதுகாப்பை பெரிய அளவில் கேள்விக்குறியதாக்கியுள்ளது. 


ஜூன் 19 அன்று தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனை உட்பட நான்கு இடங்களைத் ஈரான் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானுடன் தொடர்புடைய அணுசக்தி வசதிகள் என நம்பப்படும் இடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சில ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் செல்வதைக் காட்டும் காட்சிகள் வெளியான நிலையில், "ஐயன் டோம்" அதன் திறனை இழக்கத் தொடங்கிவிட்டதா என்ற ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.


இதுகுறித்து இஸ்ரேல் கூட்டுப்படையின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரலுமான அமீர் அவிவி, ஐயன் டோம் அமைப்பு அழுத்தத்தில் இருந்தாலும், அது பெரும்பாலும் அப்படியே உள்ளது. ஐயன் டோம் மட்டுமல்லாமல், பல பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுகின்றன. குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை, பெரும்பாலும் அம்பு 3 (Arrow 3) அமைப்பு இடைமறிக்கிறது. இது 90% க்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது என்றார்.


அதேசமயம், எந்த அமைப்புமே முழுமையாக குறைபாடுகள் அற்றது என்று கூற முடியாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். இதன் மூலம் Iron Dome கவசத்தில் ஓட்டை விழுந்துள்ளதையே அவர் மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக கருதப்படுகிறது.  இருப்பினும் தற்போதைக்கு இஸ்ரேலுக்கு மிகப் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் இப்படியே போர் நீடித்தால் இஸ்ரேலால் சமாளிக்க முடியாமல் போகலாம். இதனால்தான் அது அமெரிக்காவையும் உள்ளே இழுக்கப் பார்க்கிறது. ஆனால் அமெரிக்கா நேரடியாக களத்திற்கு வந்தால் ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகியவை ஈரானுக்கு நேரடியாக உதவக் கூடும் என்ற ஆபத்தும் உள்ளது.


இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி ஏற்பட்டால்தான் நல்லது. இல்லாவிட்டால் மிகப் பெரிய ஆபத்தையே உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்