லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை இயக்க போகிறார்? பரபரக்கும் கோலிவுட்

Aug 03, 2023,04:19 PM IST
சென்னை : வழக்கமாக டாப் ஹீரோக்களின் அடுத்த படம் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தற்போது வரிசையாக ஹிட் கொடுக்கும் டைரக்டர்கள் அடுத்து யாரை இயக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர். அப்படி டைரக்டர் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை, எந்த படத்தை இயக்க போகிறார் என ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது. படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. லியோவிற்கு பிறகு பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க போவதாக அவரே தெரிவித்துள்ளதால் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லப்படுகிறது.



இருந்தாலும் கோலிவுட்டில் லேட்டஸ்ட் தகவலாக, தலைவர் 171 படத்திற்கு முன்பாக பிரபாசை வைத்து தெலுங்கு படம் ஒன்றை லோகேஷ் இயக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ், தலைவர் 171 என லோகேஷ் கனராஜின் கைவசம் ஏற்கனவே பல படங்கள் உள்ளன. இவற்றில் எந்த படத்தை அவர் அடுத்ததாக இயக்க போகிறார் என ரசிகர்களை விட அதிகமாக கோலிவுட் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இப்படி பிஸியாக இருக்கும் லோகேஷ், புதியதாக பிரபாஸ் படத்தை இயக்கும் பொறுப்பையும் சேர்த்து எடுத்துக் கொள்வாரா? அப்படி எடுத்தால் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள பெரிய நடிகர்களின் படங்கள் வர தாமதமாகுமே என ரசிகர்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ, லியோ படத்தை முடித்து விட்ட லோகேஷ் தனது அடுத்த படம் பற்றியே அறிவிப்பை அவரே அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்