திமுக Vs த.வெ.க. என்பதை மாற்றி... நா.த.க Vs த.வெ.க. மாயையை உருவாக்குகிறாரா சீமான்?

Nov 02, 2024,04:46 PM IST

சென்னை: திமுக  மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என்ற போக்கை மாற்றி நாம் தமிழர் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் மோதல் என்பது போன்ற மாயையை சீமான் உருவாக்க முயல்வதாக தவெ கட்சித் தொண்டர்கள் கருதுவதாக ப்ளூசட்டை மாறன் ஒரு டிவீட் போட்டுள்ளார்.

நடிகராக வலம் வந்த விஜய் அரசியல் அவதாரம் பூணுவதற்கு முன்பு அவர் குறித்து பாசம் பொங்கப் பொங்கப் பேசுவார் சீமான். விஜய்யை வைத்து பகலவன் என்ற படத்தையும் கூட இயக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கை கூடவில்லை. விஜய் அரசியலுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியானபோது அதை வரவேற்றவர் சீமான்.



விஜய் என் தம்பி. என் கொள்கையைத்தான் பேசுவான் என்றெல்லாம் கூட பேசி வந்தார். பிறகு, விஜய் எந்தக் கொள்கையை பேசினாலும், எனக்கு எதிராகவே களமாடினாலும் கூட அவர் என் தம்பிதான்.. அந்தப் பாசம் போகாது என்றும் சீமான் கூறி வந்தார்.

ஆனால் விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு சீமான் மாறி விட்டார். திராவிடமும், தமிழ்த்தேசியமும் எனது இரு கண்கள் என்று விஜய் கூறியதை ஏற்க முடியாது. அது எனக்கு நேர் எதிரானது, சேர முடியாது என்று கூறினார் சீமான். இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் மிகக் காட்டமாக விஜய்யை சீமான் விமர்சித்திருப்பதை தவெக தொண்டர்கள் ரசிக்கவில்லை. மொத்தமாக வெகுண்டு சமூக வலைதளங்களில் சீமானுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ப்ளூசட்டை மாறன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், கோவையைச் சேர்ந்த தவெக தொண்டர் பாஸ்கரன் என்பவர் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அது இதுதான்:

இளைய சமூகத்தின் வாக்குகளை மொத்தமாக எங்கள் தளபதி பறித்து கொள்வார் என இவர் அஞ்சுகிறார். இவரைப்பற்றி எங்கள் தலைவர் தவறாக பேசவில்லை. பிறகு ஏன் மாநாடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் கதறிக்கொண்டு இருக்கிறார்? லாரியில் அடிபடுவாய், கூமுட்டை போன்ற இழிவான தாக்குதல் எதற்கு?

தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்தாலும் ஏற்போம். முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி க்விக் படத்தை தங்கள் வீடுகளில் மாட்டிவணங்குவதுதான் தமிழர் பண்பு. அதுபோலத்தான் பெரியாரும். அவர் எந்த ஜாதி, எந்த மாநிலம் என ஆராய தேவையில்லை. பெரியார்தான் எங்கள் கொள்கை தந்தை. எம்.ஜி.ஆர், வி ஜயகாந்த் என யாரையும் மொழி, சாதி, இனம் பார்த்து பிரிக்க மாட்டான் தமிழன்.

சிலநாட்கள் கழித்து 'என் தம்பியை திட்ட எனக்கு உரிமை இல்லையா?' என பல்டி அடிப்பார். இனி எங்கள் தளபதியே சமரசம் ஆனாலும்.. நாங்கள் ஏற்கமாட்டோம். எக்காலத்திலும் சீமானுடன் கூட்டணி வேண்டாம் என தளபதியிடம் வலியுறுத்துவோம். டிசம்பரில்மண்டல வாரியாக தமிழக சுற்றுப்பயணம் செய்து எங்களை சந்திக்க வரும்போதுஇதை நிச்சயம் பேசுவோம் என்று அவர் கூறியதாக ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.

விஜய் கட்சிக்கு எதிராக தற்போதைய சூழலில் தீவிரமாக எதிர்களமாடி வருவது 2 கட்சிகள்தான்.. ஒன்று திமுக, இன்னொன்று நாம் தமிழர் கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது அமைதியாகி விட்டது. அதிமுக ஆரம்பத்திலிருந்தே அமைதி காக்கிறது. பாஜகவும் கூட பெரிதாக எதுவும் பேசவில்லை. வரப் போகும் நாட்களில் விஜய் பேசப்போகும், எடுக்கப் போகும் நிலைப்பாடுகள், உத்திகளைப் பொறுத்து தவெகவுக்கு எதிரான ஆதரவான நிலைப்பாடுகளின் நிலை எப்படி இருக்கப் போகிறது என்பதை அனுமானிக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. மாநாடு நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகப் போகும்நிலையிலும் கூட விஜய்யின் பேச்சு இன்னும் அனல் மூட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் இது நிச்சயம் கூடவே செய்யும்.. குறையாது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்