சென்னை: லோக்சபா தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று எதிர்பார்பார்ப்பு நிலவி வரும் நிலையில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினர் மத்தியில் நிலவி வருகிறது.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதற்காக பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரை தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மற்றபடி கூட்டணி தொடர்பாகவோ, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.
லோக்சபா தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியல் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேமுதிக பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக தரப்பிலும் பேசியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

ஒன்று, இரண்டு என மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. நான்கு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் யார் தருகிறார்களோ அவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்பதாக தேமுதிக தீர்மானமாக உள்ளது.
இந்த நிலையில் இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லோக்சபா தேர்தலில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அந்த தகவல் கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மைத்துனர் எல் கே சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சுதீஷுக்கு ராஜ்யசபா பதவியைக் கொடுத்து விட்டு, விஜய பிரபாகரனை கள்ளக்குறிச்சி அல்லது வேறு தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்று தேமுதிக மேலிடம் சிந்தித்து வருகிறதாம்.
விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு விஜய பிரபாகரன் தான் தந்தை செய்த நலதிட்ட பணிகளை மேற்கொள்ள போவதாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் தன் தந்தையைப் போன்றே அன்னதானமும் செய்து வருகிறார். கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு திரண்ட மக்கள் கூட்டம் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் குடும்பத்தினர் உள்ளனர்.
விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தால் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிகவும் உள்ளது. முன்னதாக முன்பு ஒருமுறை அளித்த பேட்டியின்போது பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தான் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. சட்டமன்றத் தேர்தல் நோக்கியே என் பணி இருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில தொகுதிகளை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக தேமுதிக பட்டியலிட்டு வைத்துள்ளது. அதிலிருந்து தாங்கள் விரும்பும் தொகுதிகளைக் தரும் கட்சியுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுக்கும் என்று தெரிகிறது. 7ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்குப் பின்னர் ஒரு தெளிவான தகவல் கிடைக்கலாம் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}