கிப்புட்ஸ் நீர் ஓஸ் (இஸ்ரேல்): ஹமாஸ் போராளிகள் திடீரென வீடு புகுந்து மிரட்ட ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த 90 வயதுப் பாட்டி ஒருவர்.. பாஷா பட பாணியில் "எனக்கு இன்னொரு நாடு இருக்கு" என்று கூறி ஹமாஸ் போராளிகளையே ரிலாக்ஸ் ஆக்கி உயிர் தப்பியுள்ளார்.
பாஷா படத்தில் ரஜனியை யார் என்று தெரியாமல் சவால் விட்டு மிரட்டிக் கொண்டிருப்பார் கல்லூரி கரஸ்பான்டென்ட். அப்போது ரஜினி, எனக்கு இன்னொரு பேரு இருக்குன்னு அமைதியாக சொல்வார்.. அதைக் கேட்டதும் ஆடிப் போய் விடுவார் அந்த மிரட்டல் கல்லூரி நிர்வாகி.. அப்படி ஒரு கதை இஸ்ரேலில் நடந்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் 7ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்போதுதான் அது வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. இஸ்ரேலின் கிப்புட்ஸ் நீர் ஓஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் கூனியோ. 90 வயதாகிறது இந்தப் பாட்டிக்கு. சம்பவ தினத்தன்று திடீரென ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போராளிகள் வீட்டுக்குள் புகுந்து விட்டனர்.
வீட்டில் மொத்தம் 8 பேர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் சிறை பிடித்துச் சென்றனர். அதில் தற்போது இந்தப் பாட்டி உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து பிணைக் கைதிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் போராளிகளிடமிருந்து தான் தப்பியது குறித்து சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார் பாட்டி. மேலும் ஒரு புதிய டாக்குமென்டரியிலும் தோன்றவுள்ளார் இப்பாட்டி. அதில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளார் இப்பாட்டி.
அதில் அவர் கூறுகையில், அக்டோபர் 7ம் தேதி 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது எனக்குள் ஒரு யோசனை தோன்றியது. அவர்களைப் பார்த்து.. நீங்க கால்பந்து பாப்பீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று தலையசைத்தனர். அப்போது நான், லியோனல் மெஸ்ஸியின் நாட்டிலிருந்து வந்தவள் நான் என்றேன்.
அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு மெஸ்ஸியைப் பிடிக்கும். பின்னர் அவர் என்னுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார். மெஸ்ஸி பெயரைப் பயன்படுத்தியதால்தான் நானும் எனது குடும்பமும் அன்று தப்பினோம் என்று பாட்டி கூறியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இந்தப் பாட்டியின் பூர்வீகமும் அர்ஜென்டினாதானாம். இதனால்தான் மெஸ்ஸி பெயரை அவர் பயன்படுத்தியுள்ளார்.. பாட்டியின் சமயோசிதத்தால் அவரும், அவரது குடும்பத்தினரும் உயிரோடு தப்பியுள்ளனர்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}