சென்னை: ஊட்டியில், இன்று 126 வது மலர் கண்காட்சி தொடங்கி உள்ள நிலையில், ஊட்டிக்குச் செல்ல உங்க மொபைலில் ஐந்து நிமிடத்தில் இ-பாஸ் பெறலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கியுள்ளார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 126 மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை தாவரவியல் பூங்காவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியாளர் அருணா உடன் இருந்தார்
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு டிஸ்னி வேர்ல்ட் வடிவமைப்பு, 62 ஆயிரம் மலர்களைக் கொண்டு 32 அடி நீளத்தில் மலை ரயில் போன்ற வடிவமைப்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் காட்சி இன்று தொடங்கி வரும் இருபதாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைக் காண ஏராளமான மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
மலர்க் கண்காட்சியை தொடங்கிய வைத்த தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பூந்தொட்டிகள் வைத்து இந்த மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு மூன்று லட்சம் மக்கள் பார்வையிட உள்ளனர் . அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுகிறேன். பொதுமக்கள் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குப்பைகளை அங்கும் இங்குமாக போடாமல், பத்திரமாக பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மக்களுடைய பூங்கா, மக்களுடைய கண்காட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அதனால் மக்கள் இந்த கண்காட்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இ பாஸ்னால மக்களுக்கு எந்த ஒரு அச்சமும் தேவையில்லை. இது ஒரு சிம்பிளான புராசஸ். வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்கள் செல்போனில் இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். கல்லாறு செக்போஸ்ட்ல கணவர் மனைவி இருவரும் வந்தாங்க. ஆனா அவர்கள் இபாஸ் எடுக்கவில்லை என்று கூறினார்கள். உடனே அங்கேயே இ பாஸ் எடுக்க, எல்லா அதிகாரிகளும் உதவி செய்தாங்க. அதனால உங்களுடைய செல்போன் மூலமாக ஐந்து நிமிடத்தில் எடுத்திடலாம். இதற்காக எந்த ஆபீசுக்கும் போக வேண்டியது இல்லை.
நம்ம மொபைல் போனிலிருந்து உடனே நம்மளுடைய வண்டி நம்பர், என்னைக்கு போறோம், என்றைக்கு திரும்புகிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்து இ பாஸ் எடுக்கலாம். இது ரொம்ப சிம்பிளான ப்ராசஸ். இதனால ஒரு ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லை. இ-பாஸ்னால இங்கு போக முடியாது அப்படி ஒன்றும் கிடையாது. தாராளமாக எப்படி வருகிறீர்களோ அப்படி வாங்க. நாங்க வரவேற்கிறோம். இது சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு. அதை நாங்க பாலோ பண்ணுகிறோம். இ-பாஸ்னால ஒரு கட்டுப்பாடும் இல்லை எனக் கூறினார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}