சென்னை: தலைவரையும் தலைவியையும் அவமரியாதை செய்த ஒரே ஆள் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக தனது கையை விட்டுப் பறி போய் விட்டாலும் கூட விடாமல் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து வருகிறார் ஓ பன்னீர் செல்வம்.
சென்னை திருவான்மியூரில் தனது ஆலோசகர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். இதில்,
மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தலைவரையும், புரட்சி தலைவியையும் அவமரியாதை செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஆட்சியில் ஒரு சோதனை வரும் பொழுது ஓபிஎஸ் இன் ஆதரவு தேவைப்பட்டது. நான் ஆதரவு தந்ததினால் தான் அன்று ஆட்சி அமைந்தது. 5 ஓட்டில் ஆட்சி காப்பாற்றப்பட்டது. எதிர்த்து நான் வாக்களித்து இருந்திருந்தால் ஆட்சியும் இல்லை, முதலமைச்சரும் இல்லை, கட்சியே கேள்விக்குறியாகி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இவர் எல்லாம் நன்றி இல்லாமல் செயல்படுகிறார். தொண்டர்களால் உருவான இயக்கத்தை தான் மட்டுமே எல்லா பதவிகளின் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னதை மட்டுமே கேட்க வேண்டும். எதிர்த்து யாரும் பேசக்கூடாது, அம்மா கட்சிக்காக செய்தவற்றை எடுத்துச் சொன்னால் அவருக்கு கோபம் வரும்.
நான் சொல்வதை கேளுங்கள் அப்படி என்று சொன்னால், தலைவரையும் புரட்சித்தலைவையும் அவமரியாதை செய்வது போன்ற ஆகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் நம்முடைய இயக்கம். கீழே உட்கார்ந்து இருக்கிறவர்கள் மேலே உட்கார வேண்டும். நம்மை ஆளாக்கியவர்களுக்கு துரோகம் செய்யும் நிலைமை தான் இப்பொழுது இருக்கின்றது.
கழக தொண்டர்களே உரிமையை பரித்த நாச கார கும்பலுக்கு சரியான பாடம் புகட்ட தான் இங்கே வந்திருக்கின்றோம். நாம் எந்த காலத்திலும் தனிக்கட்சி என்ற நிலை இல்லை. அவரைப் பற்றிய ரகசியத்தை நான் சமயம் வரும்போது சொல்வேன் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}