சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
பா.ரஞ்சித் தயாரிப்பில், இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில், ஜெ பேபி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்து அசத்தியுள்ளனர்.
இப்படத்தினை பா.ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டோனி ப்ரிட்டோ இசையமைத்துள்ளார். இப்படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்களின் உளவியல் சிக்கலை சொல்லி இருக்கும் ஜெ பேபி படம் மக்களை கவர்ந்துள்ளது. பொதுவாக பா ரஞ்சித் தயாரிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும். ஆனால் இப்படம் வழக்கமான அரசியலை பேசும் படமாக இல்லாமல் குடும்ப உறவுகளின் உன்னதத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட பேபி (ஊர்வசி) தொலைந்து விடுகிறார். அவரைத் தேடி கண்டுபிடிக்கும் மகன்களின் உண்மை சம்பவத்தை தழுவி இப்படம் அமைந்துள்ளது. அட்டகத்தி தினேஷ் எந்த அளவிற்கு மகன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமோ அந்த அளவிற்கு வித்தியாசமாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் நடிகை ஊர்வசியை சொல்லவே வேண்டாம். தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதில் கில்லாடி. லொள்ளு சபா மாறனும் எப்போதும் போல காமெடியில் அசத்தாமல் ஊர்வசியின் மற்றொரு மகன் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்கள் அனைவருடைய நடிப்பும் ஜெ பேபி திரைப்படத்திற்கு பிளஸ் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் சமீபத்தில், வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, ஜெ பேபி படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இப்படம் உள்ளதால் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கருத்தை உள்ளடக்கியதாக உள்ளதாம்.
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
{{comments.comment}}