"பொறுங்க".. முதல்வர் ஸ்டாலின் சொன்ன ஒற்றை வார்த்தை.. போராட்டத்தை விலக்கியது ஜாக்டோ ஜியோ!

Feb 14, 2024,06:06 PM IST

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், பிப்ரவரி 26 ம் தேதி முதல் நடைபெற இருந்த காலவரையற்ற போராட்டமும் வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ- ஜியோ 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருந்தனர். இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் ஜாக்டோ-ஜியோ சங்க உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும்  என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 




இதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர், இந்த  அறிக்கையை நிராகரிப்பதாகவும், உடனடியாக முதல்வர் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்தித்தனர். 


அப்போது நிதி நிலைமை இப்போது சரியில்லை. சற்று பொறுங்கள். நிதி நிலைமை சீரானவுடன் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.


அமைப்பினு் மாநில நிர்வாகி மு.அன்பரசு பேசுகையில், எங்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ வ வேலு, உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமையில் நேற்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வரின் நேரடியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறினோம். அதன் படி முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் 30 ஒருங்கிணைப்பாளர்களும் சந்தித்தோம்.


10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்வரே அழைத்து பேசியதால் எங்கள் நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை.  எங்களது முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட முதல்வர் அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். தொடர்ந்து அவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் நாங்கள் வாபஸ் பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்