சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. .
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர் கல்விக்கான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.

இதன்படி, இன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகம் எதிரில் 150 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு வந்த ஐம்பதுக்கு மேற்பட்ட போலீசார் அவர்களை கைது செய்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். சென்னை மட்டும் இன்றி மதுரை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் குறித்து பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் கூறுகையில், எங்களுடைய பிரதான கோரிக்கை என்பது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியருக்கு ஒன்றிய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது மூன்று அமைச்சர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்ட எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் போல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும். ஒருவேளை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மாநில அளவில் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரமாக நடத்துவோம் என்றார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 5 முதல் 9 வரை அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்ரவரி 10 மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்ரவரி 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஜாக்டர் ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}