சென்னை: ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை அதிரடியாக வெளியானது. ஜெயிலர் 1 படம் போன்றே இந்தப் படமும் அதிரிபுதிரியாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்துவதாக உள்ளது.
அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது ஜெயிலர் 2. அதே டைகர் கா ஹுக்கும் வசனம் இப்படத்திலும் முக்கியமாக இடம் பெறவுள்ளது. முதல் படத்தின் அத்தனை வெற்றி அம்சங்களும் இப்படத்திலும் இருக்கும் போலத் தெரிகிறது.
டீசரே அதிரடியாக இருக்கிறது. நெல்சனும், அனிருத்தும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு அதிரடியான ஆக்ஷன் பிளாக்கை சொருகி விட்டு டீசரிலேயே புயலைக் கிளப்பியுள்ளனர்.

ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் அறிமுக டீசரை தியேட்டர்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த டீசர் வெளியான தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்திருந்து இதைப் பார்த்துக் கொண்டாடினர்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் மிகப் பெரிய ஹிட்டானது. அப்படத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். அவர் நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மிகப் பெரிய சவால்தான் படத்தின் கதை. அதிரடி திருப்பங்களுடன் கூடிய இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரும் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்கள்.
இந்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. கூலி படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதை முடித்த பிறகு ஜெயிலர் 2 படத்துக்கு ரஜினிகாந்த் வரவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
88 லட்சம் கோடி முதலீடு.. சவூதி - அமெரிக்கா உடன்பாடு.. நேட்டோ அல்லாத நாடக சவூதி அங்கீகரிப்பு
LHB கோச்சுடன் நவீனமாக மாறிய.. சேலம் டூ சென்னை எக்ஸ்பிரஸ்.. ரயில்வேக்கு சபாஷ்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
மழையிடம் வரிசைகட்டி நின்றனர்.. எங்கும் மகிழ்ச்சி!
மரம் செடி கொடி மேல் மோகம் கொண்டு.. மேகம் விடும் தூது மழை...!
எது தரமான கல்வி ?
சவரனுக்கு ரூ.92,000க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!
ஆடம்பரம், படோடபம்.. வீணாகும் உணவுகள்.. கேளிக்கையாகிப் போன திருமண விழாக்கள்
ஜி 20 உச்சி மாநாடு.. பிரதமர் மோடி 3 நாள் தென் ஆப்பிரிக்கா பயணம்!
{{comments.comment}}