ஜெயிலர் முதல் நாள் வசூல் : ஒரே நாளில் முதலிடத்திற்கு சென்ற சூப்பர்ஸ்டார்

Aug 11, 2023,12:21 PM IST

சென்னை : ரஜினி நடித்த ஜெயிலர் படம் முதல் நாளிலேயே வசூலில் மற்ற ஹீரோக்களின் படங்களின் வசூலை ஓவர் டேக் செய்து முதலிடம் பிடித்துள்ளது. 2023 ம் ஆண்டில் ரிலீசான பெரிய படங்களில் ஜெயிலர் படம் தான் முதல் நாளில் அதிக வசூலை பெற்றுள்ளது. 

டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கிட்டதட்ட 7000 தியேட்டர்களில் ஜெயிலர் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாசிடிவான விமர்சனங்களை பெற்று பாராட்டை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ரூ.250 கோடி செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.



ஜெயிலர் படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.70 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.49 கோடிகளை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் ரூ.29.46 கோடிகளையும், கர்நாடகாவில் ரூ.11 கோடிகளையும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.7 கோடிகளையும் ஜெயிலர் படம் வசூல் செய்துள்ளது. 2023 ம் ஆண்டு ரிலீசான பெரிய பட்ஜெட் படங்களில் ஜெயிலர் படம் தான் முதல் நாளிலேயே இவ்வளவு அதிகமான வசூலை பெற்றுள்ளது. 

இதற்கு முதன் அஜித்தின் துணிவு படம் தான் ரூ.24.59 கோடியுடன் முதல் இடத்தில் இருந்து வந்தது. பொன்னியின் செல்வன் 2 முதல் நாளில் ரூ.21.37 கோடிகளை வசூல் செய்து 3வது இடத்தில் உள்ளது. விஜய்யின் வாரிசு படம் முதல் நாளில் ரூ.19.43 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாவீரன், மாமன்னன், வாத்தி, பத்துதல ஆகிய படங்கள் உள்ளன. 

எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் ரஜினியின் மாஸ் எப்போதும் குறையாது. சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் தான் என ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பும், முதல் நாள் வசூலும் நிரூபித்துள்ளது.


ஜெயிலர் விமர்சனம்

https://www.youtube.com/watch?v=tmxAUH77Zss&t=13s

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்