மும்பை: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற உள்ள முகேஷ் அம்பானி வீட்டு திருமண வைபவங்களுக்காக, அங்குள்ள உள்ளூர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது மத்திய அரசு. இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.அதற்கான திருமண வைபவங்கள் குஜராத் மாநிலத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லரை வர்த்தகம் மற்றும் ஜியோ தளங்களை கவனித்து வருகிறார் ஆனந்த் அம்பானி. இவர்களது திருமணத்திற்கான விழாக்கோலம் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் 51,000 பேருக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உணவு பரிமாறியுள்ளனர். உணவைத் தொடர்ந்து, கிராமத்தை சேர்ந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தனர். சாமானிய மக்கள் முதல் உலக பிரபலங்கள் வரை இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை ஜாம்நகரில் குவிந்துள்ளனர். குறிப்பாக மைக்ரோசாப்ட நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க், டிஸ்னி நிறுவன சிஇஓ பாப் இகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உலக பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
மேலும் உள்ளூரைச் சேர்ந்த நடிகர்கள் அமிர்தாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், உலகின் முன்னணி தொழிலதிபர்களும், பிரபலங்களும் வருவதற்கு வசதியாக குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் அதாவது, பி.,25 முதல் மார்ச் 5ம் தேதி வரை சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து வழங்கியுள்ளது
மத்திய அரசு.
வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6 விமானங்களை கையாளும் ஜாம்நகரில் நேற்று மட்டும் 140 விமானங்கள் வருகை புரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்குமாறு பல வருடமாக கோரி வருகிறோம். ஆனால் ரிலையன்ஸ் குடும்பத்திற்காக ஜாம் நகர் விமான நிலையத்திற்கு தற்காலிகமாக சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் கொடுத்து பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது மத்திய அரசு என்று அவர் விமர்சித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}