ஜனநாயகன் வழக்கு வாபஸ்...படம் எப்போது ரிலீசாகும்? சென்சார் சட்டம் சொல்வது இதுதான்

Feb 10, 2026,06:18 PM IST

சென்னை : விஜய்யின் கடைசி படம் என சொல்லப்பட்டு, ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜனநாயகன். இந்த படம் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக ஜனவரி 09ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் இப்போது வரை ரிலீசாகவில்லை.


ஜனநாயகன் வழக்கு பின்னணி :




சென்சார் போர்டு தணிக்கை சான்றி அளிக்க மறுத்து வருவதால் சென்னை ஐகோர்ட்டில் படக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து சென்சார் போர்டு சார்பிலும் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டு வந்தது. படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கும் படி தணிக்கை குழு சொல்லி, அதன்படி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கை குழுவில் இருக்கும் நான்கு பேர் யு/ஏ சான்று வழங்க ஒப்புக் கொண்ட நிலையில், ஒருவர் மட்டும் புகார் அளித்ததால் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கவில்லை என தணிக்கை வாரியம் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க முடியாது. படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்யாததால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு சொன்னது.


இந்த விவகாரம் தொடர்பாக படக்குழு, சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றது. தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தணிக்கை வாரியம் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதை இங்கு விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் மீண்டும் சென்னை ஐகோர்ட்டிடமே இந்த விவகாரம் தொடர்பாக முறையிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


ஜனநாயகன் வழக்கு வாபஸ் :


இந்நிலையில் படக்குழு சார்பில், ஜனநாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி உள்ளதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், படத்தை புதிதாக ஐந்து பேர் கொண்ட தணிக்கை குழு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகன் பட சென்சார் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக படக்குழு மனுத்தாக்கல் செய்தது. இதனை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளதால் இப்போது படம் எப்போது ரிலீசாகும் என கேள்வி ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகிலும் ஆர்வமாக கேட்கப்பட்டு வருகிறது.


சென்சார் போர்டு விதிகள் சொல்வது என்ன?


சென்சார் போர்டு விதிகளின் படி, ஆவண படங்களுக்கு அதிகபட்சம் 3 நாட்களில் சான்று வழங்கப்பட்டு விடும். ஆனால் திரைப்படங்களுக்கு தணிக்கை வழங்க குறைந்தபட்சம் 18 நாட்கள் ஆகும். படக்குழு படத்தை சமர்பித்த 18 வேலை நாட்களில் தணிக்கை சான்று வழங்கப்பட்டு விடும். ஒரு வேளை படத்தில் உள்ள காட்சிகள், வசனங்களுக்கு தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தால், அவர்கள் கூறிய வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட காட்சிகள் அல்லது வசனங்கள் நீக்கப்பட்டு, மீண்டும் சமர்பிக்கப்பட்டு தணிக்கை சான்று பெற அதிகபட்சம் 48 நாட்கள் ஆகும். 


ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?


இதன் படி பார்த்தால், ஜனநாயகன் படம் மறுத்தணிக்கையில் தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றால் மார்ச் இரண்டாவது வாரத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை தணிக்கை குழு மீண்டும் ஏதாவது காட்சிகளை நீக்கும் படி தெரிவித்தால், தணிக்கை வாரிய விதிகளின்படி இன்னும் 48 நாட்கள் படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம். அப்படி பார்த்தால், கோடை விடுமுறை சமயமான ஏப்ரல் முதல் வாரத்தில் அல்லது தமிழ் புத்தாண்டிற்கு படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அந்த சமயத்தில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த சமயத்திலும் படம் ரிலீசாக சிக்கல் ஏற்படும். 


விஜய்யின் அரசியல் ரீதியான படம் என்பதால் தேர்தலுக்கு முன்பாக, அதிகபட்சம் மார்ச் மாத இறுதிக்குள் ஜனநாயகன் படத்தை படக்குழு ரிலீஸ் செய்வதற்கே அதிக வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026...இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா-லக்னோ அணிகள் மோதல்

news

Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில்.. இது சைவமா ...அசைவமா??

news

தேவகோட்டையில் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.. 100% வாக்களிக்க மக்களுக்கு அழைப்பு!

news

பங்குனி தேய்பிறை அஷ்டமி.. ஈரோடு ராட்டைசுற்றி பாளையம் காலபைரவர் கோவிலில் விசேஷம்!

news

சிவப்பழகி.. அவளன்றி ஓரணுவும் அசையாது.. அவளன்றி யார் பசியும் ஓயாது!

news

Vrischikasana: வேதாவின் யோகா.. ரப்பர் மாதிரி வளையுறாங்களேய்யா.. முயன்றால் முடியாததே இல்லை

news

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டசபை தேர்தல் 2026...காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

news

மதிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்