டெல்லி: இணைய வேகத்தில் ஜப்பான் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் வினாடிக்கு 1.02 பெட்டாபிட்ஸ் (Petabits -pbps) என்ற இணைய வேகத்தை எட்டி, இந்தியாவின் சராசரி இணைய வேகத்தை விட சுமார் 16 மில்லியன் மடங்கு (அதாவது ஒரு கோடியே அறுபது லட்சம் மடங்கு) அதிகமான சேவையை உருவாக்கியுள்ளனர்.
இந்த வியக்க வைக்கும் சாதனை, உலகளாவிய Date transmission மற்றும் எதிர்கால இணையத் தேவைகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.
ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Information and Communications Technology - NICT), சுமிடோமோ எலக்ட்ரிக் (Sumitomo Electric) மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த அதிவேக இணைய சேவை ஒரு சிறப்பு 19-கோர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (19-core optical fiber cable) மூலம் சாத்தியமாகியுள்ளது. இந்த கேபிள், தற்போது பயன்படுத்தப்படும் வழக்கமான ஃபைபர் கேபிள்களின் அதே தடிமன் கொண்டதாக இருந்தாலும், அதற்குள் 19 தனித்தனி பாதைகளைக் கொண்டுள்ளது. இதை ஆராய்ச்சியாளர்கள் "19-வழி சூப்பர் நெடுஞ்சாலை" என்று வர்ணிக்கின்றனர், இது ஒரே நேரத்தில் அதிக அளவிலான டேட்டாவை எடுத்துச் செல்ல உதவுகிறது.

இந்த சோதனை 1,808 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது லண்டனில் இருந்து ரோம் வரையிலான தூரத்திற்குச் சமமானதாகும். சிக்னல் இழப்பு இல்லாமல் நீண்ட தூரத்திற்கு இவ்வளவு அதிக வேகத்தில் தரவைப் பரிமாற்றுவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் மேம்பட்ட பெருக்கிகள் (amplifiers) மற்றும் சிக்னல் செயலாக்க முறைகளைப் பயன்படுத்தி இந்த சவாலை சமாளித்துள்ளனர்.
வேகத்தின் அர்த்தம் என்ன?
1.02 பெட்டாபிட்ஸ்/வினாடி இணைய வேகம் எந்த அளவுக்கு அதிவேகமானது என்பதைப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
எளிமையாக புரிந்து கொள்ள நெட்பிளிக்ஸை எடுத்துக் கொள்வோம். நெட்பிளிக்ஸில் உள்ள அத்தனை படங்களையும், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அப்படியே டவுன்லோடு செய்து விடலாம்.
பெரிய வீடியோ கேம்கள் என்று எடுத்துக் கொண்டால், 150GB அளவிலான 'வார்சோன்' (Warzone) போன்ற பெரிய வீடியோ கேம்களை கண் சிமிட்டும் நேரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஆங்கில விக்கிபீடியாவின் முழு உள்ளடக்கத்தையும் ஒரே நொடியில் 10,000 முறை பதிவிறக்கம் செய்யலாம்.
அதேபோல ஒரே நேரத்தில் 10 மில்லியன் 8K அல்ட்ரா-HD வீடியோக்களை தடையில்லாமல் ஸ்ட்ரீம் செய்யலாம். இது நியூயார்க் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு தெளிவான திரைப்பட ஸ்ட்ரீமை வழங்குவதற்குச் சமம்.
சுமார் 1,27,500 ஆண்டுகள் தடையில்லாத இசையைக் கேட்கத் தேவையான டேட்டாவை ஒரே நொடியில் பதிவிறக்கம் செய்யலாம்.
தற்போது இந்தியாவின் சராசரி இணைய வேகம் சுமார் 63.55 Mbps (மெகாபிட்ஸ் வினாடிக்கு) ஆக உள்ள நிலையில், இந்த புதிய ஜப்பானிய தொழில்நுட்பம் இந்தியாவின் வேகத்தை விட 16 மில்லியன் மடங்கு வேகமாக உள்ளது. அமெரிக்காவின் சராசரி இணைய வேகமான 290 Mbps உடன் ஒப்பிடுகையில், இது 3.5 மில்லியன் மடங்கு வேகமாக இருக்கும்.
இந்த தொழில்நுட்பம் தற்போது ஆய்வக சோதனைகளில் இருந்தாலும், எதிர்கால தரவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு முக்கிய படியாகும். உலகளாவிய இணையப் போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகள், தன்னாட்சி வாகனங்கள் (autonomous vehicles) மற்றும் பில்லியன் கணக்கான இணைக்கப்பட்ட சாதனங்களால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிவேக இணையம், முற்றிலும் புதிய உள்கட்டமைப்புகளை நிறுவாமல், ஏற்கனவே உள்ள ஃபைபர் கேபிள் அளவிலேயே நெட்வொர்க் திறனை விரிவாக்க வழி வகுக்கும்.
இந்த சாதனை, 6G நெட்வொர்க்குகள், கடல்வழி கேபிள்கள் மற்றும் உலகளாவிய தரவு மையங்களை இணைக்கும் விதம் போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானின் இந்த புதிய கண்டுபிடிப்பு, டிஜிட்டல் உலகின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}