முதல்ல அம்மா.. அப்புறம்தான் பாகிஸ்தான்.. பும்ரா நெகிழ்ச்சி!

Oct 12, 2023,05:03 PM IST

அகமதாபாத்: பாகிஸ்தானுடன் விளையாடுவதை விட எனது தாயாரைப் பார்ப்பதற்குத்தான் நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.


அகமதாபாத்தில் அக்டோபர் 14ம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ளன.  இந்தப் போட்டி குறித்து வழக்கம் போல ஹைப் கிளப்பப்பட்டு வருகிறது. ஏதோ இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கப் போவது என்ற பில்டப்களில் பலரும் இறங்கியுள்ளனர்.




இந்த நிலையில் அகமதாபாத் வந்துள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். என்ன பாஸ் பாகிஸ்தானுடன் மோதப் போகும் குஷியா என்று கேட்டால், அட நீங்க வேற.. நான் எங்க அம்மாவைப் பார்க்கப் போறேன்.. அந்த சந்தோஷம்தான் என்று சிரித்தபடி கூறுகிறார் பும்ரா.


உண்மைதான்... பும்ராவுக்கு வேறு எதையும் விட அவரது தாயார்தான் உசத்தி.. அதற்குக் காரணம் இல்லாமல்  இல்லை. பும்ராவுக்கு 5 வயதாக இருக்கும்போது அவரது தந்தை ஜஸ்பிர் சிங் மரணமடைந்து விட்டார். கைப்பிள்ளையோடு தவித்த  பும்ராவின் தாயார் தல்ஜித் கெளர், மிகுந்த தன்னம்பிக்கையோடு தனது பிள்ளையை வளர்த்தார். அவர் ஒரு ஆசிரியை என்பதால் இயல்பிலேயே தனது மகனுக்கு நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். டீச்சர் வளர்த்த பிள்ளை என்பதால் பும்ரா நல்ல  பழக்க வழக்கங்களுடன்தான் வளர்ந்து வந்தார்.


பஞ்சாப்தான் பும்ராவின் பெற்றோருக்குப் பூர்வீகம். சீக்கியரான இவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே குஜராத்திற்கு இடம் பெயர்ந்து வந்து செட்டிலானவர்கள். நீண்ட டூர் போய் விட்டு குஜராத் திரும்பினாலே பும்ரா குஷியாகி விடுவார். அம்மாவைப் பார்க்கப் போகிறோம், அம்மா கையால் சாப்பிடப் போகிறோம் என்ற வழக்கமான குழந்தைகளின் சந்தோஷம்தான் அது. இப்போதும் கூட உலகக் கோப்பைப் போட்டிக்காக அங்குமிங்குமாக போய்க் கொண்டிருக்கும் அவர் பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் வந்திருப்பதால் குஷியாகியுள்ளார்.


புதன்கிழமை நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்த சந்தோஷத்துடன் தற்போது அம்மாவையம் பார்த்து மகிழ்ந்துள்ளார் பும்ரா. 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 1.30 லட்சம் பேர் இதில் அமர்ந்து போட்டியைப் பார்க்க முடியும். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இதுதான். இங்கு முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்