காதலர் தினம் முடிந்த பிறகு.. பிப்ரவரி 16ம் தேதி.. ஜெயம் ரவியின் "சைரன்.. ரிலீஸாகிறது!

Jan 23, 2024,02:48 PM IST

சென்னை: ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ள  “சைரன்” படம் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் தான் சைரன்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


ஹோம் மூவி மார்க்ஸ் சார்பில்  சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் அறிமுக இயக்குநராக உருவாகியுள்ளார். அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் படம் தான் சைரன்.




நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது  ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


சமீபத்தில் டீசரில் வெளியான ஜெயம் ரவியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், பெரும் வரவேற்பை குவித்தது. ஜெயம் ரவி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு பாத்திரங்களில் தோன்றுகிறார்.


ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம்ரவி பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லரை,  விரைவில் படக்குழு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரையிலான ஜெயம்ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் சைரன் படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்