ஓ மழையே.. மறக்க முடியாத பெரு மழையே!

Mar 28, 2026,11:55 AM IST

- கவிக்குயில் ஜெயசுதா


வெளியில் வெளுத்தெடுக்கிறது வெயில்.. இப்பவே வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில் ஜில்லென்று மழை பெய்தால் எப்படி இருக்கும்..!


ஆனால் நாம நினைத்த நேரத்தில் எல்லாம் மழை வந்து விடுமா என்ன.. ஆனால் மழை வரும்.. அதாவது நினைவுகளில் தேங்கி நிற்கும் மழையை நாம் கூட்டி வருவோமா.. மழை நினைவுகளை உங்களுக்காக கவிதை வரிகளில் வடித்துள்ளார் நம்முடைய ஜெயசுதா.


2015ம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த பெரு மழையை மறக்க முடியுமா என்ன.. அப்போது எழுதிய ஒரு கவிதை இது.. உங்களுக்காக!




ஓ மழையே!

நெடுநாளாய் வாராமல்

ஏமாற்றம் தந்தாய்!

திடீரென வந்தாய்

உயிர் பல வாரினாய்

ஜடப்பொருளோடு சவமாக்கினாய்

உனக்கு ஏன் இந்த ஆர்ப்பரிப்பு!

எங்களுக்கோ பரிதவிப்பு!

நிலையில்லா அலைக்கழிப்பு

பெய்தது கனமழை

சூழ்ந்தது பிணமழை


பள்ளமான இடம் நோக்கி

வெள்ளம் செல்ல

உள்ளம் உருக்குது

நிலை குலைய வைத்து

உருக்குலைய வைக்கும்

உருக்கமான காட்சிகள்


--


அச்சச்சோ! அச்சச்சோ!


வீட்டைச் சுற்றி தண்ணீர் சூழ்ந்து போச்சே

எங்க குடி கெட்டுப் போச்சே!

ஏரிகளின் ஆக்கிரமிப்பு

கண்கள் ஏதெல்லாம் பார்த்து போச்சு!

முகமெல்லாம் வாடிப்போச்சே

குடலெல்லாம் எரிச்சுப்போச்சு!


பல்லி பாம்பு பூரான்

எங்களை பதம் பார்த்து போச்சே!

ஊறியிருந்த இளமையெல்லாம்!

ஊனமாக உயர்ந்து போச்சே!

ஆறுமாதம் பிளான் போட்ட சாலை

தண்ணீரில் அடிச்சுப்போச்சே!

ஏரியெல்லாம் நிரம்பி போச்சே!

எங்க உயிரெல்லாம் எடுத்துப்போச்சே!


குளமெல்லாம் நிரம்பி போச்சே! எங்க

கண்ணீரோ வற்றிப் போச்சே!

உலகமெல்லாம் இருண்டு போச்சே!

உயிரெல்லாம் ஒடுங்கிப் போச்சே!

பருவ நிலை மாற்றத்தால் - எங்கள்

வாழ்க்கை இயல்புநிலை மாறிப்போச்சே!


வாழ்க்கைத் தரம் புரண்டு போச்சே!

வீதியெல்லாம் நாறிப்போச்சே!

(ஆசையாய் வளர்த்த)

ஆடு மாடு கோழியெல்லாம்

ஆத்தோட அடிச்சிப்போச்சே!


அரிசி, புளி, உப்பு எல்லாம்

குப்பையோடு குப்பையாச்சே!


வெள்ளம் பாய்ந்து

உள்ளம் நெகிழ வைத்த காட்சிகள்

ரசித்த வண்ணத் தொலைக்காட்சி

ருசித்த உணவுப் பொருட்கள்

நேசித்த ஆடைகள்

மகிழ வைத்த மகிழ்வுந்து

நெகிழ வைத்து

நெஞ்சம் சிதைந்து

மூழ்கிப் போனதே

மூச்சு விடும் நேரத்தில்.


அதிசயம் கண்டு வியந்த

இந்நூற்றாண்டில் -

தொலை தொடர்பு சாதனங்களும்

காட்சிப்படுத்தும் கணினியும் இருந்தும்

கொண்டு சென்றதென்னவோ!

மின்சாரமில்லா முன் காலத்திற்கு

சென்ற இடமெல்லாம் தண்ணீர்

குடிக்க கிடைக்கவில்லை சொட்டு நீர்.


கல்வியாளர்களின் துடிதுடிப்பு

தேர்வுகள் ஒத்திவைப்பு

தண்ணீரில் போன சான்றோர்களுக்கு

எங்கள்

கண்ணீர் அஞ்சலி!


(ஜெயசுதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரிவாக்கம், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்