நீரும் வாழ்வும்

Mar 26, 2026,01:08 PM IST

- ப.பூரணவள்ளி


கதிரவன் ஒளியால் நீராவி என்றாகி 

கார்முகிலாய் வானில் வளம் வருமே 

குளிர்ந்த காற்று முகிலைத் தொட 

மழையாய்ப் பெய்தால் மண் செழிக்கும். 

மண்ணில் வளங்கள் பல செழித்தால் 

மக்கள் நலமுடன் தான் வாழ்வர்

உண்மையும் நேர்மையும் செழித்து ஓங்கும் 

ஒப்பிலா நற்பண்புகள் தான் சிறக்கும். 




விண்நீர் பொய்க்கும் நிலை வந்தால் 

மண்வளம் பொய்க்கும் நிலை வருமே 

மண்வளம் பொய்ப்பின் பின் நாளில் 

நம் சந்ததி வாழ வழிவருமோ? 

நீர்நிலை அனைத்தின் நலம் காப்போம் 

வளம் பெற நிலத்தடி நீர் காப்போம் 

அளவாய் பயன் செய நாம் அறிவோம் 

நம் சந்ததி செழிக்க வழி கொடுப்போம்.


(ப.பூரணவள்ளி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்,  

மதுரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

news

Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்