மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அந்தப் பொறுப்பிலிருந்து விடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். விரைவில் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான ஆளெடுப்பு தொடர்பாக விளம்பரம் வெளியிடப்படவுள்ளதாகவும் ஜெய்ஷா கூறியுள்ளார்.
ஜூன் மாத்துடன் ராகுல் டிராவிடன் பதவிக்காலம் முடிவடைகிறது. ஜெய்ஷாவின் பேச்சின் மூலம் டிராவிடுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. விரைவில் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் வெளியாகவுள்ளதாம். இந்தியரே தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா அல்லது வெளிநாட்டுக்காரர் யாராவது தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா என்று தெரியவில்லை.

இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார் டிராவிட். 2023 உலகக் கோப்பைப் போட்டியுடன் அவரது கான்டிராக்ட் முடிவடைந்த நிலையில் அது இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அவருக்கு பதவி நீட்டிப்பு தர பிசிசிஐ முடிவு செய்யவில்லை. புதியவரைத் தேர்ந்தெடுக்கும் மன நிலையில் அது உள்ளது.
ஒரு வேளை ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராக விரும்பினால் அவரும் விண்ணப்பிக்கலாம் என்று ஜெய்ஷா கூறியுள்ளார். வெளிநாட்டுப் பயிற்சியாளருக்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளிக்க மறுத்து விட்டார் ஜெய்ஷா. அதை இப்போதே சொல்ல முடியாது என்று அவர் பதிலளித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். கபில்தேவ் - கவாஸ்கர் காலத்துக்குப் பின்னர், கங்குலி, சச்சின் டெண்டுல்கர், டிராவிட் ஆகியோரது காலம்தான் இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலமாக விளங்கியது. 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிட் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 344 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்களும், ஒரு நாள் போட்டிகளில் 12 சதங்களும் இவர் போட்டுள்ளார். பேட்டிங் தவிர வெகு அரிதாக பந்து வீச்சிலும் ஈடுபட்டுள்ளார். நல்லதொரு விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டவர் டிராவிட்.
இந்திய அணியின் வீரராக இவரது அதிகபட்ச வெற்றி என்பது 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா கோப்பை வென்று சாம்பியன் ஆனதுதான். பயிற்சியாளராக இவரது சாதனை என்பது 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றது மற்றும் 2023 ஆசியா கோப்பையை வென்றது ஆகியவை ஆகும். 2023ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. அதேபோல ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}