லண்டன்: உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்த எலான் மஸ்க், 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக அவர் முதலிடத்தை இழந்துள்ளார். முதலிடத்திற்கு அமேஸான் நிறுவன அதிபர் ஜெப் பெஜாஸ் முன்னேறியுள்ளார்.
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமையன்று 7.2 சதவீத சரிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்து அவர் 2வது இடத்திற்குப் போய் விட்டார். மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 197.7 பில்லியன் டாலர்கள் ஆகும். பெஜாஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் டாலர்கள்.
2021ம் ஆண்டிலிருந்து ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்காமல் இருந்து வந்தார் பெஜாஸ். இப்போதுதான் முதல் முறையாக முதலிடத்திற்கு அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர்தான் பெஜாஸ்.
ப்ளூம்பெர்க் பட்டியலில் 197 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் அர்னால்ட் 3வது இடத்தில் இருக்கிறார். டெஸ்லாவுக்கு தொடர் சரிவு ஏற்பட்டால் இவர் எலான் மஸ்க்கை முந்தி 2வது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. 4வது இடத்தில் மார்க் ஜக்கர்பர்க் 179 பில்லியன் டாலருடன் இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் 5வது இடத்தில் இருக்கிறார்.
முகேஷ் அம்பானி 11 - அதானி 12 - ஷிவ் நாடார் 37
இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இந்த வரிசையில் 11வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர்கள் ஆகும். அவருக்கு அடுத்து அதாவது 12வது இடத்தில் கெளதம் அதானி 104 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார்.
டாப் 20 பட்டியலில் இந்த இரண்டு இந்தியர்கள்தான் உள்ளனர். டாப் 50 என்று எடுத்துக் கொண்டால், 36வது இடத்தில் ஷபூர் மிஸ்திரி 38.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். 37.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 37வது இடத்தில் எச்சிஎல் அதிபர் ஷிவ் நாடார் இருக்கிறார். டாப் 50 பட்டியலில் மொத்தம் 4 இந்தியர்கள் உலகப் பெரும் கோடீஸ்வரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}