- ஜெனிட்டா ரீனா
சிறு வயதில் 4 மணிக்கு எழுந்து குளித்து தலைபின்னல் இரண்டு போட்டு பள்ளிச் சீருடை அணிந்து 5 மணிக்குள் பூந்தோட்டம் சென்று பூ பொறுக்குவோம் குடும்பத்துடன்!
காலை இட்டிலி, தோசை, சோறு இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட எடுத்துக் கொண்டும் பசித்தால் 4 அல்லது 5 மணிக்கு சாப்பிட்டு விடுவோம். பூ பறித்துவிட்டு பள்ளிக்கு கிளம்பும் முன் நீராகாரம் குடித்து விட்டு பள்ளிப்பை ஒருகை; பூ ப்பை மறுகை என ஓட்டமும் நடையுமாக சாலை வந்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இந்தப் பூவை எங்கள் கடையில் கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு இன்றுபோல் அன்றும் வேகவேகமாக காலை வணக்கக் கூட்டத்திற்கு முன் பள்ளி செல்ல வேண்டும் என்று போவேன்.
ஆனால் அதிக நாட்கள் இடையில் போய் தாமதமாக வந்ததற்கு காரணம் சொல்லி விட்டு திட்டினால் திட்டையும், அடித்தால் அடியையும் வாங்கிக் கொண்டு ஓரளவு நன்றாக படிப்பதால் இனிமேல் காலதாமதமாக பள்ளிக்கு வரக்கூடாது என்ற தலைமையாசிரியரின் அறிவுரைக்கு சரிங்க டீச்சர்னு சொல்லிவிட்டு ஓடிப் போய் என் வகுப்பறைக்குள் நுழைவேன். உடனே நண்பர் பட்டாளம் கேலி கிண்டல் செய்வார்கள்.
அதற்கு நான் செய்கிற வேலையை யாராவது செய்துவிட்டு பள்ளி வருகிறீர்களா? என்பேன். பிறகு பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பார்கள். அடுத்த நிமிடமே அதை மறந்துவிட்டு படித்து எப்படியாவது பெரிய ஆளாகிட வேண்டும் என்ற கனவில் பாடத்தை கவனித்து நன்றாக படிப்பேன். தெரியாத மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். நான் பாடப்புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்ததில்லை. ( செய்யுள், poem) தவிர மற்ற அனைத்தையும் ஆசிரியர் பாடம் நடத்தும் போது நன்றாக கவனிப்பேன். பின் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து ஒருமுறை பாடங்களை வாசிப்பேன்.

புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை வாசிப்பேன். இதுதான் என் பள்ளிக்கான அனுபவம். காரணம் என் பெற்றோர் ஆரம்பக்கல்வி மட்டுமே கற்றவர்கள். ஆனால் எங்களை மாதிரி இருக்கக்கூடாது. நீங்கள் நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகனும். ஊர்ல படிக்காதவன் பாரு! அவன் பிள்ளைகளை எப்படி படிக்க வைத்திருக்கிறான் பாரு என்று சொல்லுமளவிற்கு படிக்க வேண்டும் என்று எங்கள் பெற்றோர் கூறினார்கள். அவர்களின் எண்ணப் படியே நான் ஆசிரியர்.
தங்கை செவிலியர். தம்பி பொறியாளர். எங்களைப் பார்த்து எங்கள் தெருவில் உள்ள அனைத்து குழந்தைகளும் இன்று பல பட்ட மேற்படிப்பு படித்து நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். இன்றும் அது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)
CSK vs RCB: பிரித்து மேய்ந்த பட்டிதர்.. டிம் டேவிட்.. 250 ரன்களை எப்படித் துரத்தப் போகுது சிஎஸ்கே?
US rescue OP: அமெரிக்க வீரரை ஈரானிலிருந்து மீட்டு விட்டோம்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்
Happy Easter.. உயிர்த்தெழுந்தார் எம் தேவன்!
ஏசு பாலன் வருகிறார்!
Sripriya Short stories: பசிக்க விடு, பலமாக வளரும்!
ஈஸ்டர் திருநாள்.. உயிர்த்தெழுந்த நாயகன்!
சிலுவையை மீட்பின் அடையாளமாக்கியவரே!
உயிர்த்தெழுந்த நம்பிக்கை – ஈஸ்டர் திருநாளின் அழகான கதை
{{comments.comment}}