டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். அதில், முக்கியமாக, மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 2100 தொகை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வெற்றி பெறும் முஸ்தீபுகளில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இறங்கயுள்ளன. இந்த நிலையில் இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகி 25 வருடங்கள் ஆகியுள்ளதால் அதைக் குறிப்பிடும் வகையில் 25 வகையான வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2100 உதவித் தொகை அளிக்கப்படும் என்ற உறுதிமொழி. கோகோ தீதி என்ற பெயரில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
இதுதவிர 21 லட்சம் குடும்பங்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டித் தருவோம். குடிநீர் வசதி செய்து தருவோம். இளைஞர்களுக்கு 2 வருட காலத்துக்கு ரூ. 2000 உதவித் தொகை தரும் திட்டம் ஆகியவற்றையும் பாஜக அறிவித்துள்ளது.
இதேபோல புதிதாக 2 லட்சத்து 87 ஆயிரம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், 5 லட்சம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதிகளையும் பாஜக அறிவித்துள்ளது.
லட்சுமி ஜோஹார் யோசஜனா திட்டத்தின் மூலமாக ரூ. 500க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் பாஜக அறிவித்துள்ளது. பழங்குடியினர் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் சித்தோ கான்ஹோ ஆய்வு மையம் அமைக்கப்படும். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பாஜக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்ததும் மகளிர் உரிமைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு பெரும் வரேவற்பைப் பெற்றது நினைவிருக்கலாம். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதே பாணியில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெண்களுக்கான உதவித் தொகைத் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}