மனைவிக்கு "நோ" பதவி.. கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய ஹேமந்த் சோரன்.. கட்சி உடைவதைத் தடுக்க!

Jan 31, 2024,10:01 PM IST

ராஞ்சி : ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் விலகியுள்ள ஹேமந்த் சோரன், தனக்குப் பதில் தனது மனைவி கல்பனா சோரனைத்தான் முதல்வராக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை முதல்வராக்கினால், பாஜக மூலம் கட்சியை உடைக்க முயற்சிகள் நடைபெறலாம் என்று கருதியே மிகவும் சீனியர் லீடரான சாம்பாய் சோரனை முதல்வராக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில மோசடி, சுரங்க முறைகேடு, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளை அமலாக்கத்துறை தற்போது விசாரித்து வருகிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரைணயில் ஹேமந்த் சோரன் பல்வேறு பண மோசடி விவகாரங்களில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் பலவும் அமலாக்கத்துறையிடம் சிக்கி உள்ளன. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி ஹேமந்த் சோரனுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.


9 முறை சம்மன் அனுப்பிய இடி




இதுவரை அனுப்பப்பட்ட 9 சம்மன்களுக்கு அவர் பதிலளிக்கவும் இல்லை, விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை. ஜனவரி 27ம் தேதி அவருக்கு 10வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு கடிதம் மூலம் பதிலளித்துள்ள ஹேமந்த் சோரன், ஜனவரி 31ம் தேதி ராஞ்சியில் தான் விசாரணைக்கு ஆஜராவதாக பதிலளித்திருந்தார். ஹேமந்த் சோரனுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவருக்கு தண்டனை கிடைத்தால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இதனால் ஜார்கண்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.


81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சி 30 இடங்களையும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. எதிர்க்கட்சியான பாஜக 25 இடங்களையும், ஜார்கண்ட் விகாஸ் மோர்சா 3 இடங்களையும், அனைத்து ஜார்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 2 இடங்களையும், மற்ற கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளன. 


மனைவியை அமர்த்த வைத்திருந்த திட்டம் காலி




இதனால் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏ.,க்களுடன் ஹேமந்த் சோரன் சமீபத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். எம்எல்ஏ.,க்கள் அனைவரையும் பெட்டி, படுக்கைகளுடன் ராஞ்சியில் வந்து தங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். எம்எல்ஏ.,க்களுடன் அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கட்சியில் எந்த பொறுப்பும் வகிக்காத அவரது மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டார். இவர் இன்ஜினியரிங்கில் மாஸ்டர் டிகிரியும், எம்பிஏ.,வும் படித்தவர். 


பீகாரில் மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, கைது செய்யப்பட்ட போது அப்போதைய முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், அரசியலுக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக நியமித்து, ஆட்சியை காப்பாற்றினார்.  அதே பாணியில், ஹேமந்த் சோரனும் தனது மனைவியை முதல்வராக்கத் திட்டமிட்டிருந்தார். கட்சியில் இதற்கு ஓரளவு ஆதரவும் இருந்தது. ஆனால் முழு ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில்தான் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ஹேமந்த் சோரன் அதிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டதைத்  தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், கல்பனா சோரனுக்குப் பதில், சீனியர் லீடரான சாம்பாய் சோரனை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் கூறப்படுகிறது.


லாலு பிரசாத் யாதவ் காலத்தில் பாஜக போன்ற மிகப்  பெரிய சக்தி கிடையாது.. இடி அச்சுறுத்தல் கிடையாது.. வேறு விதமான அழுத்தங்களும் இல்லை. இதனால் லாலுவால் இஷ்டத்திற்கு முடிவெடுக்க முடிந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.. மனைவியை முதல்வராக்கினால், கண்டிப்பாக கட்சியை உடைத்து விடுவார்கள் என்ற அச்சம் ஹேமந்த் சோரனுக்கு கடைசி நேரத்தில் ஏற்பட்டு விட்டது. காரணம் அரசியலுக்கு அறிமுகமே இல்லாத கல்பனாவை முதல்வராக ஏற்க கட்சியில் பலரும் தயங்குவார்கள் என்பதாலும், இந்த தயக்கம் அதிருப்தியாக மாறினால் கட்சி உடையும், ஆட்சி கவிழும் என்பதால்தான் கட்சி மற்றும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சீனியர் லீடரான சாம்பாய் சோரனை முதல்வராக்கியுள்ளார்.


விவசாயியான சாம்பாய் சோரன் மூத்த அரசியல் தலைவர். இவரை தலைவராக கட்சியில் எளிதாக ஏற்றுக் கொள்வர்கள் என்பதாலும், பாஜக கட்சியை உடைக்க முயற்சிக்காது என்ற நம்பிக்கையாலும் அவரை முதல்வராக்க முடிவு செய்தார் ஹேமந்த் என்று சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்