"நாங்கள் செதுக்கவே இல்லை... எல்லாம் கடவுள் அருள்".. நெகிழ்ந்து உருகிய கார்த்திக் சுப்புராஜ்

Nov 18, 2023,05:47 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்தின் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை.. கடவுள் அருளால் தானாக நடந்தது.. என்று பேசினார்.

வெற்றி விழாவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ் ,எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் நவீன் சந்திரா, முகமது அலி, விது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஜிகர்தண்டா என்ற படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஜிகர்தண்டா, பீசா வெற்றியை தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலேயே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என மக்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.



ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் ரெட் சயின்ஸ் மூவி வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இதில் ராகவாலாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

எப்போதுமே ராகவா லாரன்ஸ் படம் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஹாரர் படங்களில் அதிகம் நடித்து வருபவர். தற்போது இந்த கதை களத்திலிருந்து  முற்றிலும் மாறி வித்தியாசமான கெட்டப்பில், தனது நடிப்பில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 அன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர் என  ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். 

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து  படக்குழுவினர் வாழ்த்து பெற்ற நிலையில்,நேற்று நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் என்னுடைய குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.



இது போலவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷ் ,இயக்குனர் சங்கர், நெல்சன், மாரி செல்வராஜ், ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது...

இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. என் உள் மனது சொன்ன மாதிரி இந்த படத்தின் நாயகன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய‌ உள்ளது. சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள். ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி. 

நிறைய பேர் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். என்னுடைய‌ குரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை, ரஜினிகாந்த் அவர்களை என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமியாக‌ நினைக்கிறேன். என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என் அம்மா பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை. நன்றி. 

இயக்குந‌ர் கார்த்திக் சுப்பராஜ்

இந்த திரைப்படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அதே சமயம் பதட்டமும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவோடும் இன்று 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை திரையரங்கில் பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பை வழங்கிய ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் திரு கதிரேசன் அவர்களுக்கு நன்றி. இதில் பணியாற்றிய‌ அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சிறப்பாக நடித்திருந்தனர். சட்டானி கதாபாத்திரம் அவ்வளவு சுலபம் இல்லை. அந்த வேடத்தில் நடித்த விது மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார்.

இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்தன. இதன் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை, எல்லாம் கடவுளின் அருளால் தானாக அமைந்தது. ஒன்றரை வருடத்திற்கு முன்னால் இந்த கதையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம், இன்று இது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், இயக்குநர்கள் ஷங்கர், நெல்சன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலருக்கு நன்றி. என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்னை பாராட்டி உள்ளார்.



'பீட்சா' மற்றும் 'மெர்குரி' படங்களுக்கு பாராட்டிய ஒரே நபர் தலைவர் மட்டும் தான். நன்றி தலைவா. மாபெரும் ஆதரவளித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

எஸ் ஜே சூர்யா பேசியதாவது...

வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது.  மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட‌ ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. 



இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. "நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்" என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிற‌து. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக‌ அமைந்தது. அனைவ‌ருக்கும் பிடித்த‌ மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குந‌ர் திரையில் காட்டியிருக்கிறார் என்றார் சூர்யா.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்