சென்னை: தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் (டான்ஜெட்கோ) டெக்னீசியன் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களை நிரப்ப வரும் 10.7.24 முதல் 31.7.24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.
தமிழ்நாடு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. அதேபோல் மின்சாரத்தை மின்கடத்திகள் வழியாக கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் சார்பில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் - tangedco) சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 395, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 22, எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட்டேசன் இன்ஜினியரிங் 9, தகவல் தொழில்நுட்பம் 9, சிவில் இன்ஜினியரிங் 15, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 50, என மொத்தம் 500 காலி பணியிடங்கள் உள்ளன.
இந்தக் காலி பணியிடங்களை நிரப்ப வரும் 10.7.24 முதல் 31.7.24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 8000 வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி டிப்ளமோ படிப்பில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏதேனும் ஒன்றில் முழு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் www.tangedco.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும். apprenticeships பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}