ஐஎஸ்ஐஎஸ்ஸை விட மோசமானது ஹமாஸ்.. அழிக்கப்பட வேண்டும்.. இஸ்ரேலில் ஜோ பிடன் பேட்டி!

Oct 18, 2023,06:17 PM IST

வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காஸா மக்கள் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வரும் பின்னணியில், அப்பாவிகள் பலர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேல் வந்து அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார்.


தனது இஸ்ரேல் பயணத்தின்போது பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோர்டான், எகிப்து தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார் அதிபர் ஜோ பிடன். ஆனால் காஸா நகரில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோ பிடனை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டார்.




அப்பாஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, தற்போது ஜோர்டான், எகிப்து தலைவர்களுடனான சந்திப்பையும் ரத்து செய்து விட்டது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் இப்போது கிட்டத்தட்ட இன அழிப்புப் போராக மாறியுள்ளது. காஸாவை முழுமையாக தரைமட்டமாக்கும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவிகள் பலர் இதில் அநியாயமாக பலியாகி வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கிஞ்சித்தும் இஸ்ரேல் கவலைப்படுவதாக தெரியவில்லை. காஸாவில் உள்ள அஹில் அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குலில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள், அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.


இதனால் அரபு நாடுகள் அனைத்தும் கடும் ஆத்திரமடைந்துள்ளன. இந்த சம்பவத்தால் கொதிப்படைந்துள்ள பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோ பிடனை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டார். அவரது இந்த நடவடிக்கை அமெரிக்காவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜோர்டான், எகிப்து தலைவர்களுடனான சந்திப்பை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.


இஸ்ரேலின் பிடிவாதத்தால் கொதி நிலையை இந்தப் போர் எட்டி வருகிறது. இஸ்ரேல் அடங்க வேண்டும்.. அதேபோல ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் தங்களது போரைக் கைவிட வேண்டும். அனைவரும் இணைந்து ஐ.நா. சபையின் மத்தியஸ்தத்தை மதித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் போர் வேறு பாதையில் திசை திரும்ப வாய்ப்புள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.


இந்த நிலையில், அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் வந்து பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவை . சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் போர் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விட மோசமானது ஹமாஸ் என்று அதிபர் ஜோ பிடன் வர்ணித்தார். ஹமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பிடன், நதன்யாகுவிடம் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்