வாஷிங்டன்: தன்னைப் பார்த்து வயதானவன் என்று கிண்டல் செய்வோருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பிடன். குறிப்பாக குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட ஆயத்தமாகி வரும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பார்த்து, அவரும் வயதானவர்தான், அவர் மட்டும் இளைஞரா என்று விமர்சித்துள்ளார் ஜோ பிடன்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான சூடு அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் டொனால்ட் டிரம்ப் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் அவர் முன்னணியும் வகித்து வருகிறார். அனேகமாக அவரே போட்டியிடுவார் என்று தெரிகிறது.
மறுபக்கம் தற்போதைய அதிபர் ஜோ பிடன் மீண்டும் போட்டியிட தயாராகி வருகிறார். அவரது எதிர்ப்பாளர்கள் அவரது வயதை சுட்டிக் காட்டி விமர்சித்து வருவதை வழக்கமாக்கி வருகின்றனர். இது ஜோ பிடனை கோபப்படுத்தியுள்ளது. நான் வயதானவன் என்றால் டிரம்ப் மட்டும் இளைஞரா என்று அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து என்பிசி டிவியின் "Late Night With Seth Meyers" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஜோ பிடன் கூறுகையில், என்னோட வயது 81.. அதனால் என்ன.. முதலில் எனக்கு எதிராக நிற்பவர் யார்.. அவரோட வயது என்ன.. என்னைப் போல அவரும் வயதானவர்தானே... அவரோட மனைவி பெயர் கூட அவருக்கு தெரியாது.. (டிரம்ப்புக்கு 77 வயதாகிறது). 2வது இங்கு வயது முக்கியமில்லை. என்ன ஐடியாஸ் வச்சிருக்கோம்.. அதுதானே முக்கியம். என்னிடம் ஐடியாஸ் நிறையவே இருக்கிறது.
நாம் எதிர்காலத்தைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். நாங்கள் எங்களது ஆட்சியில் எல்லாமே செய்திருக்கிறோம். சின்ன சின்ன விஷயத்தைக் கூட நாங்கள் விடவில்லை. நல்ல விஷயங்கள் நிறையவே செய்திருக்கிறோம் என்றார் ஜோ பிடன்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}